தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம்…!


கேரளாவில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் விஸ்மயா விளையாட்டாக எழுதிய கடிதம் குறித்து நடிகர் காளிதாஸ் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட விஸ்மயா (22) வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி ஜூன் 21ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இவர் இறுதி ஆண்டு ஆயுர்வேத மருத்துவ படிப்பு படித்து வந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னை கண்மூடித்தனமாக தாக்கினார் என கூறி சில புகைப்படங்களை பகிர்ந்தார்.

தற்போது அவர் கணவர் கிரண் காவல்துறையில் சரணடைந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read  'வலிமை' அப்டேட் கொடுத்த யுவன் - ரசிகர்கள் உற்சாகம்!

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு விஸ்மயா கல்லூரியில் காதலர் தினத்தன்று நடந்த காதல் கடிதம் எழுதும் போட்டியில் நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் தோழி அருணிமா, “இந்த காதல் கடிதம் வைரலாக வேண்டும். அதன்பின் காளிதாஸ் இதை படித்து என்னை சந்திக்க அழைப்பார். என்னுடன் செல்பி எடுத்துக் கொள்வார். இப்போது அவர் கன்னக்குழி இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இது நடிகர் காளிதாஸ் கவனத்துக்குச் சென்றது. இதற்கு பதில் அளித்திருக்கும் நடிகர் காளிதாஸ், “அன்பார்ந்த விஸ்மயா. உங்களை நேசித்த மக்களை விட்டு நீங்கள் சென்ற பிறகுதான் உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. மன்னித்துவிடுங்கள். யாரும் கேட்காத அந்த குரலுக்கும் எரிந்து போன அந்த கனவுகளுக்கும் இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் தனியாக தனது பேஸ்புக் பக்கத்தில் விஸ்மயா புகைப்படத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “விஸ்மாயாவின் மோசமான முடிவுக்கான காரணங்கள் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

Also Read  காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை!

அதிக படிப்பறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி என உலகின் அத்தனை மூலைகளிலிருந்து பெறப்படும் அறிவு எல்லாம் இருந்தும் நமது மக்களுக்கு வரதட்சனை என்கிற குற்றத்தால் ஏற்படும் தீவிர விளைவுகள் குறித்து ஏன் இன்னும் புரியவில்லை?

காயத் தழும்புகள் எல்லாமே கண்களுக்கு தெரிவதில்லை. எல்லா காரியங்களிலும் ரத்தம் தெரிவதில்லை. நாம் இதை எல்லாம் உணர இன்னும் இதேபோல் எவ்வளவு சோகம் நிகழ வேண்டுமோ?

Also Read  தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

எப்போதுமே ஏன் பாதிக்கப்பட்டவர்களை சுற்றியே சமூகம் கலங்கும் சுமத்துகிறது? அப்படி பாதிக்கப்பட்டவர்களை நாம் ஏன் அரவணைப்பது இல்லை? வரதட்சணை என்பது ஒரு வழக்கம் என்று ஒப்புக்கொள்வது எவ்வளவு தவறானது.

துன்புறுத்தல்களுக்கு அமைதியாக இரு என்று சொல்வதும் அதை ஊக்குவிப்பது எவ்வளவு இரக்கமற்றது. ஒரு வளர்ச்சி அடைந்து சமூகமாக நமக்கு ஏன் கடினமாக இருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் சட்டங்களில் இன்னும் கடுமையான விதிகள் சேர்க்கப்படும் என்றும் மக்களுக்கு இது குறித்து கற்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நம்புகிறேன்.

மேலும், நம் வீட்டுப் பெண்களை முன்னிறுத்தும் சமூக ஊடகங்களில் வெறும் பேச்சளவில் மட்டும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கவுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு..!

Lekha Shree

தொடர்ந்து இளைஞரின் கேலிகிண்டலுக்கு உள்ளான டீனேஜ் பெண் செய்த சோக செயல்….

VIGNESH PERUMAL

நடிகர் சூர்யா கைவசம் 4 படங்கள்! – குஷியில் ரசிகர்கள்!

Lekha Shree

‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் விவேக் என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?

Lekha Shree

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

“நான் விவேக்கின் ரசிகன்” – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

Lekha Shree

திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

sathya suganthi

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

வெளியானது ‘மஹா’ பட டீசர்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

பறவை காய்ச்சல் பாதிப்பு – 17,000 கோழிகள், வாத்துகளுக்கு வந்த ஆபத்து

Tamil Mint