இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த விஜே மகேஸ்வரி..!


சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் ஜீ தமிழ் மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Also Read  ’வாய்ப்பு கிடைச்சா இத செய்வேன்’... சமந்தா குறித்து பிரபல ஹிந்தி நடிகர் பதில்..!

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது மகேஸ்வரி விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் கமல் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Also Read  மகனின் பெயரை அறிவித்த சாண்டி மாஸ்டர்…! வாழ்த்துக்களை பொழியும் ரசிகர்கள்..!

இந்த நிலையில், விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்துவரும் மகேஸ்வரி ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Viral news in tamil, VJ Maheswari tweets for support political party,  political tweet

அதில் அவர் கூறியிருப்பதாவது, ”என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு யார் மேலேயும் நம்பிக்கை வர மாட்டேங்குது, என்னுடைய பையன், என்னுடைய அம்மா, என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்…!

என்னை புரிந்து கொண்டு, என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருக்கிறது. என் அம்மாவைப் போலவே நானும் சிங்கிள் மதராக இருக்கிறேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார் மகேஸ்வரி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஓடிடியில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் திரையிடுவதில்லை” – திரையரங்கு உரிமையாளர்கள்

Lekha Shree

சர்ச்சையில் சிக்கிய ரஜினியின் ரீல் மகள்…!

Lekha Shree

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

மீண்டும் இணையும் ‘வடசென்னை’ ராஜன்-அன்பு கூட்டணி…! எந்த படத்திற்காக தெரியுமா?

Lekha Shree

“பத்மஸ்ரீ விருதை திருப்பி தருகிறேன். ஆனால்…!” – கங்கனா ரனாவத் சவால்..!

Lekha Shree

‘டான்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட லைகா..!

Lekha Shree

ஜீவனாம்சம் வேண்டாம் என திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா சமந்தா?

Lekha Shree

கதிஜாவாக சமந்தா… கண்மணியாக நயன்.. வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பர்ஸ்ட் லுக்ஸ்..!

Lekha Shree

‘Dangal’ பட நடிகையை 3-வதாக மணக்கிறாரா ஆமிர் கான்?

Lekha Shree

சூர்யா 40-ல் இணைந்த ‘அண்ணாத்த’ நட்சத்திரம்! யார் தெரியுமா?

Tamil Mint

ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

Devaraj