a

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..


அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. மதியம் 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 145 இடங்களிலும் அதிமுக கூட்டணி 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இதுவரை 10 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், விராலிமலை தொகுதியில் மட்டும் ஒரு சுற்று கூட முடிக்கப்படாமல் உள்ளது..

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.. திமுக சார்பில் மா. பழனியப்பன் களமிறக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில் இன்று காலை விராலிமலை தொகுதியில் பதிவான வாக்குகள் தொடங்கியது.

Also Read  அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

முதல் சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த வரிசை எண் வேறுபட்டிருந்ததால் திமுக மற்றும் அமமுகவினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர்..

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இதனையடுத்து 2ஆம் சுற்றுக்கான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அதிலும் ஒரு இயந்திரத்தில் இருந்த எண் மாறுபட்டது.

Also Read  10 ஆண்டுகள் கழித்து ஆட்சியமைக்கும் திமுக! மே 7-ம் தேதி பதவிபேற்பு!

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்ட எண்கள் மாறுபட்டே வருவதைக் கண்ட திமுக வேட்பாளர் மற்றும் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்..

இதுதொடர்பாக திமுக சார்பில் ர் மாவட்டத் தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரிக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது..

Also Read  அதிமுகவின் அதிரடி தேர்தல் பிளான்!!

வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி சுமார் 6 மணி நேரம் கடந்தும் விராலிமலை தொகுதி எண்ணிக்கையில் முதல் சுற்று கூட முடிவடையாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேர்மையை ஆயுதமாக நாங்கள் கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள்: கமல்ஹாசன்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு…!

Devaraj

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

Lekha Shree

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

வாக்குச்சாவடியில் சிவகுமாராக மாறிய அஜித்…! “தல”யை டென்சனாக்கிய செல்பி பாய்…!

Devaraj

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj

பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் இன்று காலமானார்!

Tamil Mint

தேர்தல் ஆணைய குழு இன்று சென்னை வருகை!

Tamil Mint