தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்


தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும்,(டிச.,12, 13) வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16ல் துவங்கியது. அன்றைய தினம், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Also Read  கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி டிரான்ஸ்பர்

வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.

கடந்த, 21ம் தேதி நடந்த முகாமில், 5.43 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்றுள்ளன. அதேபோல, 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 6.14 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

Also Read  'அண்ணாத்தா' போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்..! வைரலாகும் வீடியோ..!

மீண்டும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இம்முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முகாமிற்கு செல்ல முடியாதவர்கள், www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களிலும், ‘VOTER HELP LINE’ மொபைல் ஆப்ஸ் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Also Read  பாமகவை குறிவைத்து உடைக்கிறதா பாஜக?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

Tamil Mint

கடலுக்கு சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் சடலம் மீட்பு!

Tamil Mint

மேகதாது அணை விவகாரம் – பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

Tamil Mint

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

sathya suganthi

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint