மத ரீதியான சர்ச்சை கருத்து..! மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்..!


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாக்கர் யூனிஸ் தொலைக்காட்சி நேரலை தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் ரிஸ்வான் (79) பாபர் அசாம் (68) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 152 ரன்களை எடுத்து இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது.

Also Read  ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது உனக்கென்ன கவலை? - விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய லக்ஷ்மன்!

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இதை கொண்டாடினர். அன்றைய தினம் போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தானின் ARY நியூஸ் என்ற தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்களான வாக்கர் யூனிஸ் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது வாக்கர் யூனிஸ் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் பேட்டிங்-ஐ புகழ்த்துவிட்டு, “இதை விட சிறப்பானது என்னவென்றால் போட்டியின் நடுவே இந்துக்கள் முன்னிலையில் ரிஸ்வான் நமாஸ் செய்ததுதான்” என கூறினார்.

Also Read  இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

இந்த கருத்து சமூக வளைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். இவ்வாறு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து யூனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

Also Read  மும்பையை புரட்டிப்போட்ட டவ் தே புயல் - குஜராத்தில் கரையை கடந்தது

இதுகுறித்து ட்விட்டரில், “உற்சாகம் மிகுதியால் அந்த நேரத்தில் அவர் தெரிவித்துவிட்டேன். பலரின் மனதை காயப்படுத்திய அந்த கருத்தை நான் வேண்டுமென்றே கூறவில்லை. அது தவறானதாகும். இதற்காக என்னை மன்னியுங்கள். விளையாட்டு மக்களை இனம், நிறம், மதம் கடந்து ஒன்றிணைக்கிறது” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய விமானப்படையின் புதிய தளபதி நியமனம்..!

suma lekha

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

பும்ராவுக்கு இவுங்க தான் மணப்பெண் – ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு..

Jaya Thilagan

கொலை வழக்கில் கைதான யானைகள்…! வினோத நிகழ்வு..!

Lekha Shree

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

டெல்டா பிளஸ்: இந்த 3 மாநிலங்களுக்கு தான் எச்சரிக்கை

sathya suganthi

வெங்காயத்தை திருடியவர்கள் கைது

Tamil Mint

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் 2-வது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா..!

Lekha Shree

முதலாளியின் மனைவியை கொலை செய்த காம கொடூரன்!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

சர்வதேச மல்யுத்த போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Lekha Shree