a

இந்த 5 செயலிகளை உடனே டெலிட் செய்யுங்கள்…! எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!


ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களை குறிவைத்து ஹேக்கர்கள் தொடர்ந்து நடத்திவரும் சைபர் கிரைம்கள் நிறைய வெளிவந்த வண்ணம் உள்ளன.

நமக்கே தெரியாமல் நாம் பயன்படுத்தும் செயலிகள் வழியாக நுழைந்து தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை அவர்களால் திருட முடியும்.

மேலும் திருடிய தகவல்களை வைத்து நம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுத்துச் செல்லவும் தனிப்பட்ட தகவல்களை வைத்து மிரட்டவும் முடியும்.

அண்மையில் பைட் டிபெண்டர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹேக்கர்கள் நம்பத்தகுந்த செயலிகளின் வழியாக ஊடுருவுவதை கண்டுபிடித்துள்ளனர்.

Also Read  வாட்ஸ்அப் பயன்படுத்த இனிமேல் இன்டர்நெட் தேவையில்லை....

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் போன்களில் இருக்கும் செயலிகள் இத்தகைய ஹேக்கர்கள் நுழைவதற்கு அனுமதிப்பதில்லை.

ஆனால் கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருக்கும் சேவைகள் அல்லது ஒரிஜினல் செயலி போலவே இருக்கும் போலி செயலிகள் மூலம் அவர்கள் ஊடுருவுவது தெரியவந்துள்ளது.

இணையதளங்களில் மக்களின் பெரும் மதிப்பை பெற்றுள்ள விஎல்சி மீடியா ப்ளேயர், ஆன்டிவைரஸ் போன்ற நம்பத் தகுந்த செயலிகளை போலியாக உருவாக்கி அதன் மூலம் ஊடுருவி தகவல் திருடுவதில் ஈடுபடுகின்றனர்.

இலவச மூவி, சீரியல்களை பார்க்கும் வசதி, கேம்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்து அவர்களை தங்கள் வலையில் ஹேக்கர்கள் விழ வைப்பதாக ஆய்வு நடத்திய அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read  PUBG-ன் புதிய பரிணாமமான Battlegrounds Mobile India விளையாட்டுக்கான முன்பதிவு தொடக்கம்…!

Uplift (health and wellness app), VLC media Player, Kaspersky Antivirus, Bookreader Pluto TV போன்ற செயலிகளின் போலிகளை உருவாக்கிகள் அதன்மூலம் யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், “இந்த செயலியின் ஒரிஜினல் வெர்ஷனில் ஹேக்கர்கள் ஊடுருவ முடியாது. ஒருவேளை நீங்கள் கிராப் செய்யப்பட்ட அல்லது குறுக்கு வழியில் கிடைக்கும் போலி செயலியை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கும்.

Also Read  பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

அதனால், உடனடியாக இந்த செயலிகளை டெலிட் செய்து விட்டு ஒரிஜினல் வெர்ஷன்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது பிட் டிபெண்டர் (BitDefender).


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj

பாஸ்போர்ட்க்கு பதிலாக ஸ்கேனிங் முறை – துபாய் விமான நிலையத்தில் அறிமுகம்

Jaya Thilagan

டுவிட்டருக்கு தடை : ‘கூ’ இந்திய செயலிக்கு கூடும் மவுசு…!

sathya suganthi

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

ஆன்லைனில் பணம் இழப்பு ஏற்பட்டு விட்டதா அதை மீட்க எளிதான வழி…..

VIGNESH PERUMAL

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் பிரபல நிறுவனம்…!

Lekha Shree

செவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

Lekha Shree

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi