தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.


மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நீர்வள மேலாண்மையில் சிறப்பான பங்கை ஆற்றி வரும் தனிநபர்களையும், அமைப்புகளையும் ஊக்குவித்து அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தில், தேசிய தண்ணீர்  விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை புத்தாக்கத் துறை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் தேசிய தண்ணீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அவை பின்வருமாறு:

Also Read  ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

1) சிறந்த மாநிலம்,

2) சிறந்த மாவட்டம் (ஐந்து மண்டலங்களுக்கு தலா இரண்டு விருதுகள், மொத்தம் 10 விருதுகள்),

3) சிறந்த கிராமப் பஞ்சாயத்து (ஐந்து மண்டலங்களுக்கு தலா மூன்று விருதுகள், மொத்தம் 15 விருதுகள்),

4) சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு

5) சிறந்த ஊடகம் (அச்சு மற்றும் மின்னணு)

6) சிறந்த பள்ளி

7) வளாகப் பயன்பாட்டுக்காக சிறந்த நிறுவனம்/குடியிருப்போர் நல சங்கம்/ஆன்மிக அமைப்பு

 8) சிறந்த தொழிற்சாலை

Also Read  கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடியதா? - தமிழக சுகாதாரத்துறை கூறுவது என்ன?

9) சிறந்த அரசு சாரா அமைப்பு

10) சிறந்த நீர் பயனர் சங்கம்

11) பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கான சிறந்த தொழிலகம்.

சிறந்த மாவட்ட மற்றும் சிறந்த கிராம பஞ்சாயத்துகள் என்ற பிரிவில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

Also Read  தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

இந்த விருதுகளின் நோக்கம், அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்), கிராம பஞ்சாயத்துகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீர் பயனர் சங்கங்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட் துறை, தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் மழைநீர் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர் பெருக்கத்தின் புதுமையான நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிப்பதாகும். உள்ளீடுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2021 பிப்ரவரி 10 ஆகும். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா – விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

Lekha Shree

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

ஆக்சிஜன் விநியோகத்தில் குளறுபடி – 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

ஆதார் இல்லை என்றால் கொரோனா தடுப்பூசி கிடையாதா…? ஆதார் ஆணையம் விளக்கம்

sathya suganthi

காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையிலேயே வளைகாப்பு நடத்திய கணவர்!

Shanmugapriya

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

Lekha Shree

இறந்த யானையைப் பார்த்து கதறி அழுத வனத்துறை ஊழியர்! -நெஞ்சை உருக்கும் வீடியோ!

Tamil Mint

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!

Shanmugapriya

கேரளா அருகே கடலுக்கடியில் தீவு? வியப்பூட்டும் தகவல்கள்…!

sathya suganthi

கொரோனா பரவலை தடுக்க காற்றோட்டம் முக்கியம் – மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை

sathya suganthi