மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ் !


மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசு தொடர்பாக அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

Also Read  காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

இந்நிலையில்,மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, ஒன்றிய அரசு தொடர்பாக கருத்து தெரிவித்தார். எங்களை பொறுத்தவரை மத்திய அரசு என்று தான் அழைப்போம், பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று அன்புமணி கூறினார்.

Also Read  பதவியேற்பில் ஓரம்கட்டப்பட்டாரா கனிமொழி? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர் என்ற அவர், ஆனால் இப்போது கேட்டால் தேதி சொல்லவில்லை என கூறுகின்றனர் என்றும், அது ஆக்க பூர்வமான கருத்து இல்லை, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் குறைக்கலாம் எனவும் கோரிக்கையை முன்வைத்தார். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-வில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பகீர் பின்னணி! சசிகலா பயத்தில் இபிஎஸ்!

Lekha Shree

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

sathya suganthi

முடிவுக்கு வந்த காங். பஞ்சாயத்து…! சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவானார் விஜயதரணி…!

sathya suganthi

“அ.தி.மு.க ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க தான்” – தேமுதிக பொருளாளர் பிரேமலதா

Tamil Mint

நாம் தமிழர், தேமுதிகவை பின்னுக்கு தள்ளிய ஹரிநாடார்…!

sathya suganthi

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி…!

sathya suganthi

20 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் திமுக! எந்த தொகுதியில் தெரியுமா?

Lekha Shree

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

“தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி!” – சீமான்

Lekha Shree

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு..!

Lekha Shree