a

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் – வானிலை மையம்


கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை, அடுத்த 2 நாட்களுக்கு 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும் என்றும் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

உள்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்த 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் கர்நாடகாவில் இருந்து தென்கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கணவனை திருத்த கண்டித்த மனைவி..... மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை...

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj

தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்ட போகும் லாக் டவுன்

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரம் இதோ!

Tamil Mint

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு

Tamil Mint

கருணாஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா

Tamil Mint

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு முக்கியமானது – பிரதமர் மோடி உரை

Tamil Mint

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது

Tamil Mint

தி.மு.க., வில் சேர எந்த அழைப்பும் வரவில்லை: மு.க. அழகிரி

Tamil Mint

தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint