தமிழகம்: கல்லூரிகளில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் கட்டாயம்..!


தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில் பருவ தேர்வுகள் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனால், மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடிய மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

Also Read  எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! - அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் மாணவர்களுக்கு நேரடி தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தது.

Also Read  உலகின் மிகப்பெரிய லாலிபாப் செய்து அசத்திய யூடியூபர்… வைரல் வீடியோ இதோ..!

இந்நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் எல்லா வாரத்திலும் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தவேண்டும் எனவும் மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி புதிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

பாஜகவில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி? – பதிலளித்த அண்ணாமலை!

suma lekha

மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுக வேட்பாளர்கள்…!எதற்கு தெரியுமா…?

Devaraj

தமிழகம்: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு சொந்தம்?… இன்று வெளியாகும் தீர்ப்பு..!

suma lekha

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

சிறைத் துறைக்கு சசிகலா புதிய கோரிக்கை

Tamil Mint

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு…!

Devaraj

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint