ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அமோக வெற்றி..!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

Also Read  விஜய் ஹாசரே கோப்பை – ஆந்திர அணியிடம் வீழ்ந்த தமிழக அணி

முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டிகள் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நல்ல தொடக்கம் தந்த மேத்யூ வேட்-ஆரோன் பின்ச் ஜோடி வெளியேற, ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Also Read  டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு…!

20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

Also Read  ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான பவானி தேவிக்கு 6 வருடத்திற்கு முன் உதவிய பிரபலம்..!

இதனால் 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

38 பந்துகளில் 67 ரன்கள் விளாசிய கெய்ல் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா எப்போதுமே கெத்து தான் – கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி

HariHara Suthan

கோலி 2.O – இந்தியாவுக்குக் காத்திருக்கும் அடுத்த அதிரடி பேட்ஸ்மேன்!

HariHara Suthan

குட்டி நாடு.! அனுப்பினது ரெண்டே பேரு.! தங்க பதக்கத்தை சொல்லி அடிச்ச சிங்கப்பெண்

mani maran

இந்தியா vs இங்கிலாந்து.. வெற்றிப் பாதையில் தொடருமா இந்திய அணி..!

HariHara Suthan

கோப்பையை மட்டும் அல்ல நெட்டிசன்களின் மனதையும் வென்ற கோலி…!

Lekha Shree

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!

Devaraj

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் – இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் இதே நாளில் நிகழ்த்திய சாதனை…!

Lekha Shree

சிஎஸ்கே வெற்றி, பஞ்சாப் பிளேஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது

Tamil Mint

“ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்” – ஜப்பானிய மக்கள் போராட்டம்!

Lekha Shree

50 பந்துகளில் 95 ரன்கள் – ஐபிஎல்-க்கு முன்பே மிரட்டிய விஜய் சங்கர்!

Lekha Shree