மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு


மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இந்த செயலுக்கு பாஜ.க., வினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

வரும் மே மாதம் மேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அவர் வாகனத்தை மறிக்க முற்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பு வாகனத்தில் பா.ஜ., எதிர்ப்பாளர்கள் சிலர், கற்களை வீசி தாக்கினர். 

இதில், ஒரு வாகனத்தில் வந்த பாஜ., தலைவர்கள் தீபஞ்சன் குஹா, கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோரின் வாங்கனங்களிலும் கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! - வைரலாகும் சிசிடிவி காட்சி

“இந்த தாக்குதலில் நான் காயமடைந்துள்ளேன். கட்சித் தலைவரின் காரும் தாக்கப்பட்டது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். போலீசார் முன்னிலையில், குண்டர்கள் எங்களை தாக்கினர். நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இல்லை என்பது போல் உணர்ந்தோம்” என கைலாஷ் விஜயவர்ஜியா கூறினார்.

 “எங்களது ஒரு கார் விடாமல் அனைத்து கார்களும் தாக்கப்பட்டுள்ளன. நான் குண்டு துளைக்காத காரில் பயணம் செய்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன். மேற்கு வங்கத்தில் இந்த சட்டவிரோதம் மற்றும் சகிப்பின்மை முடிவுக்கு வர வேண்டும். 

Also Read  கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

இந்த தாக்குதலில் முகுல் ராய் மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் காயமடைந்தனர். இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம். 2021ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., அடுத்த அரசாங்கத்தை அமைக்கும், தாமரை மலரும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என பா.ஜ.க., தேசிய தலைவர் நட்டா தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் – விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

Devaraj

பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

Tamil Mint

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

கொலை குற்றம் – மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்!

Lekha Shree

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” தந்தையர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

Lekha Shree