“ஒருவேளை நியூசிலாந்து ஜெயிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?” – சிரித்துக்கொண்டே ஜடேஜா கூறிய பதில் வைரல்!


இந்தியா-ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் முடிந்த பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா கூறிய பதில் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 85 ரன்களுக்கு சுருண்டது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Also Read  பேட்டிங்கில் இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டிய முகம்மது ஷமி, பும்ரா: அடேங்கப்பா.. அட்டகாச ஆட்டம்.!

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா செய்தியாளர்களை சந்தித்த போது நிருபர் ஒருவர், “ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்துக்கொண்டே ஜடேஜா, “அப்புறம் என்ன பொருட்களை பையில் எடுத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்” என கூறினார்.

Also Read  "உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?" - ஆடம் ஜாம்ப்பா

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 2-ல் பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.

இதையடுத்து 2-வது அணியாக அரையிறுதிக்குள் நுழைய நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

Also Read  மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: என்ன நடந்தது.?

இதில் நியூசிலாந்து 3 வெற்றியும் இந்தியா 2 வெற்றியும் பெற்றுள்ளன. அதனால் அரையிறுதிக்கு தகுதி பெற நியூசிலாந்துக்கு இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும்.

ஆனால் இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால், ஒருவேளை இன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு இந்தியா செல்ல வாய்ப்பு உள்ளது.

காரணம் நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் இந்தியாவை விட குறைவாக உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிகளின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்கு சென்று விடும்.

இதன்காரணமாக இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புநியூஸிலாந்தின் வெற்றி தோல்வியை பொருத்தே அமையும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரங்களில் நடக்க உள்ளது: முழு விவரங்கள் இதோ

suma lekha

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி வழக்கு.!

suma lekha

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

Lekha Shree

தோனி குறித்து சி எஸ் கே எடுத்த சூப்பர் முடிவு

Tamil Mint

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

suma lekha

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Devaraj

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்படும் விராட் கோலி?

Lekha Shree

ஐபிஎல்லில் கொரோனா – என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

Devaraj

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

தோனியை போல நடந்து கொள்ளுங்கள் – இந்திய அணி கேப்டனுக்கு மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்!

Devaraj

அமளியில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்… நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை..!

suma lekha