திமிங்கலத்தின் வாந்தியால் ஆண்மை அதிகரிக்குமா.? உண்மை என்ன.?


கடந்த ஜூன் மாதம் திருச்செந்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 கோடி மதிப்பிலான அம்பெர்கிரீஸை போலீசார் மற்றும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த அம்பெர்கிரீஸ் என்றால் என்ன.? அதற்கு ஏன் இவ்வளவு கிராக்கி. அதை குறிவைத்து நடக்கும் மாபியா கும்பல் குறித்து விரிவான அலசலே இந்த கட்டுரை.

அம்பெர்கிரீஸ் என்பது திமிங்கலங்கள் மீன்களை உண்ணும்போது இரைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு விதமான திரவத்தை சுரக்கும். திமிங்கலத்தின் வாயில் சுரக்கும் இந்த திரவம் பட்டதும் மீன்கள் இறந்து விடும். ஒரு கட்டத்தில் செரிமானம் ஆகாத உணவு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தால் அதனை திமிங்கலம் வாய் வழியாக வெளியேற்றும். இதுதான் கடலில் உப்புத் தண்ணீரில் மிதந்து வெயில் பட்டு காலப்போக்கில் கட்டியாக மாறிவிடும். இதனை திமிங்கலத்தின் வாந்தி என்றும் குறிப்பிடலாம்.

Also Read  பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! - மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

குறிப்பாக ஸ்பெர்ம்வேல் திமிங்கலங்கள் இதனை அதிகமாக செய்யும். இந்தத் திமிங்கலத்தின் வாந்தி தான் மாபியா நெட்வொர்க்குகள் மூலம் கடத்தப்பட்டு பணமாக்கப்படுகிறது. உலக அளவில் ஸ்பெர்ம் திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் அவற்றை அறிய வகை பிரிவில் சேர்த்து பாதுகாத்து வருகின்றனர்.

பொதுவாகவே கடலில் மிதக்கும் அம்பெர்கிரீசை மீனவர்கள் உள்ளிட்ட சில நபர்களின் மூலம் மாபியா நெட்வொர்க்குகள் கடத்தல் செய்து வந்தனர். ஆனால் இதற்கான தேவை அதிகரித்துள்ளதால் தற்போது செயற்கையாக அன்பெர்கிரீஸ் எடுப்பதாக கூறி ஸ்பெர்ம் திமிங்கலங்களை மாஃபியா கும்பல்கள் வேட்டையாடத் தொடங்கியுள்ளன. திமிங்கலங்களின் தடை உள்ளிட்ட பகுதிகளை கத்தியால் கிழித்து அதன் கழிவுகளை வெளியே எடுத்து பிறகு சில செயல்முறைகளை மேற்கொண்டு செயற்கை ஆம்பெர்கிரீஸாக மாற்றி வருகின்றனர். தற்போது இந்த மாபியா தமிழகம் மற்றும் கேரளாவில் விரிவடைந்துள்ளது.

Also Read  வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

அப்படி என்ன இருக்கிறது.! இந்த அன்பெர்கிரீஸ், நறுமண திரவியங்கள் எனப்படும் perfume-ங்களில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதன் டிமாண்ட் அதிகரித்து உள்ளதால் மாபியா கும்பல் அம்பெர்கிரீஸ் ஆண்மை சக்தியை அதிகரிக்கும், பாலுணர்வை தூண்டும் என்ற வதந்திகளை பரப்பி அதிக விலைக்கு இதனை விற்று லாபம் பார்க்கிறார்கள். போதாக்குறைக்கு மிகப்பெரிய இடத்தில் உள்ள நபர்கள் இந்த அம்பெர்கிரீஸை புகையிலையைப் போன எரித்து அந்த புகையை நுகர்ந்து போதையில் திளைக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பல போதை பொருட்களுக்கு மாணவர்களும் இளைஞர்களும் அடிமையாகி உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாஃபியா கும்பல்கள் கட்டவிழ்த்து விடப்படும் இந்த அம்பெர்கிரீஸ் வினியோகம் மிகப்பெரிய சமூக அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Also Read  காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! - அப்படி என்னவா இருக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம் இன்று

Tamil Mint

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

கொரோனா தொற்றை வென்று 117வது பிறந்தநாளை கொண்டாடிய கன்னியஸ்திரி!

Tamil Mint

இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா…! அசத்தும் சிங்கப்பூர்…!

Devaraj

ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் புதிய அரசாங்கம்… தாலிபான்கள் இன்று அறிவிப்பு?

Lekha Shree

பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?

Tamil Mint

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் ‘மாஸ்’ காட்டிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…!

Lekha Shree

உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

Lekha Shree

இந்தியாவிற்காக ஒளியூட்டப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி! – கண்கவர் புகைப்படம்

Shanmugapriya

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint