a

வாட்ஸ் அப்-ல் வரும் லிங்க்…. அழுத்தினால் பணம் திருடு போகும் அபாயம்..! முழு விவரம் இதோ!


இன்றைய நவீனக்காலக்கட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் எல்லா வேலைகளையும் செய்து விடுகிறோம். ஆனால், தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்துள்ள அதே நேரத்தில் ஆன்லைனில் நிகழும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்வதற்கான புதிய வழியையும் கண்டறிந்துள்ளனர்.

அந்த வகையில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் வழியாக செயல்படும் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நாம் பெரும்பாலும் வாட்ஸ் அப் அல்லது எஸ்.எஸ்.எஸ் மூலம் பல்வேறு செய்திகளை பெறுகிறோம். அதில் பல வகையான இணைப்புகள் (Link) வழங்கப்படுகின்றன. அத்தகைய இணைப்புகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் தொடந்து எச்சரித்து வருகின்றனர்.

Also Read  எல்லாம் சரிதான் ஆனால் நாட்டுக்காக விளையாடுறது ரொம்ப முக்கியம் பாஸ் - இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட்!

இந்நிலையில் இங்கிலாந்தில், ஃப்ளூபோட் என்ற போலி லிங்க் டெலிவரி ட்ராக் என்ற பெயரில் பரவி வருகிறது. இது ஒரு விநியோக நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கூறி போலி செய்திகளை பரப்பி வருகிறது. இந்த போலி இணைப்பில், பயனர்கள் இந்த ஆப்பை பயன்பாட்டை நிறுவுமாறு கேட்கப்படுகிறார்கள். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து தரவுகளை திருடும் போலி ஆப் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Android ஸ்மார்ட்போன் பயனர் இந்த போலி இணைப்பை திறக்க முயற்சித்தால், அது ஒரு வலைத்தளத்திற்கு திருப்பி விடப்படுகிறது. அந்த வலைத்தளம் பயனர்களை மூன்றாம் தரப்பு தளத்திற்கு APK பைலை பதிவிறக்க வழிநடத்துகிறது. இந்த வகை சைபர் தாக்குதலிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க APK ஃபைல் வழக்கமாக இயல்பாகவே தடுக்கப்படும், ஆனால், இது போலி வலைத்தள பயனர்களுக்கு ஃப்ளூபோட்டைப் பதிவிறக்க தகவல்களை வழங்குகிறது.

Also Read  சியோமி எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

இந்த போலி செய்தி ஸ்மார்ட்போனிலிருந்து கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் (contact list) போன்ற முக்கியமான தரவுகளை திருடுகிறது. இந்த போலி ஆப், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வேகமாக பரவுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், பயனர்களை பெரிய அளவில் பாதிக்கிறது என்றும் தெரிகிறது.

இதனிடையே போலி செயலிகளைக் கண்டறிவதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இந்த போலி செயலியால் பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை விரைவில் reset செய்ய வேண்டும் எனவும், இதனால் உங்கள் தரவு பாதுகாக்கப்படும் எனவும் என்.சி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Also Read  விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட்…!

இது தவிர, பயனர்கள் தங்கள் தரவைச் சேமிக்க எந்த புதிய கணக்கிலும் உள்நுழைய வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரவைச் சேமிக்க பயனர்கள் கடவுச்சொல்லை மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த ஆண்டு 2வது முறையாக உயர்ந்த ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை..!

Lekha Shree

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

2021ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

Lekha Shree

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

வரப்போகும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி தெரியுமா உங்களுக்கு….?

VIGNESH PERUMAL

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

மீண்டும் களமிறங்கும் பிரபல நிறுவனம்…. அதிக எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…

VIGNESH PERUMAL

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

பரிவர்த்தனையை எளிமையாக்கும் புதிய சாதனம் அறிமுகம்…!

Lekha Shree

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

Lekha Shree