a

மத்திய அரசு போட்ட அடுக்கடுக்கான கட்டுப்பாடு! ஏற்க முடியாது என வாட்ஸ் ஆப் வழக்கு…!


இந்தியாவில் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த புதிய ஐடி விதிகள் மூலம், சமூக வலைதள நிறுவங்கள், ஓடிடி தளங்கள் கன்டென்ட்கள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் உள்பட குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தியர் ஒருவர் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.

சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்களில் எந்த போஸ்ட்கள், கன்டென்ட்கள், வீடியோக்களை நீக்க வேண்டும் என்று இந்த குழுவே இறுதி முடிவு எடுக்கும்.

ஒரு போஸ்ட்டை அல்லது வீடியோவை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டால் 36 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த விதிகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள அளிக்கப்பட்ட மூன்று மாத கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்னும் டிவிட்டர் இந்த விதிகளை ஏற்கவில்லை.

இன்னொரு பக்கம், தங்கள் பயனர்களின் பிரைவசி பறிக்கப்படும் எனக்கூறி புதிய கட்டுப்பாட்டுக்கு எதிராக வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

புதிய விதியின்படி இனி வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பரவுகிறது என்றால், அதை முதலில் யார் அனுப்பினார் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இது வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் எண்ட் – டூ எண்ட் என்கிரிப்ஷன் முறைக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்களை நம்மையும், மெசேஜை பெறுபவரையும் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது என்ற விதிக்கு எதிரானது என்கிறது வாட்ஸ் ஆப்.

புதிய விதிமுறைகள் இந்தியர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறுவதாக இருக்கும் என்று வாட்ஸ் ஆப் தனது மனுவில் தெரிவித்துள்ளது.


Also Read  கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை - மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! – பஞ்சாபில் புது முயற்சி!

Shanmugapriya

ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்

Devaraj

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

காங்கிரஸில் வசீகர தலைமை இல்லை; முன்னாள் ஜனாதிபதியின் புத்தகத்தால் பரபரப்பு!

Tamil Mint

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint

ஒரே ட்வீட்டால் கிரிக்கெட் கடவுளுக்கு நேர்ந்த பங்கம்…! முழு அலசல் இதோ…!

Tamil Mint

அடுக்கடுக்கான சோதனைகள்… அசராமல் போராடும் விவசாயிகள்…

Tamil Mint

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

Tamil Mint

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi