a

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு


மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய புகார்களை வாட்ஸ்-அப் செயலி எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு மற்றும் கோடைகாலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு... ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா...!

பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்-அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி பணியாற்றிடவும், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் சானிடைசர் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சேலத்தில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா உறுதி! பள்ளி மூடப்பட்டது!

Tamil Mint

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் தண்ணீர் திறப்பு

Tamil Mint

அந்த கடிதம் என்னுடைய அறிக்கை அல்ல – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

நாளை மறுநாள் முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை…!

sathya suganthi

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! – ஒரேநாளில் 404 பேர் பலி!

Lekha Shree

பணம் கேட்டு தாய் நெருக்கடி – மகன், மகள்களை கொன்று தம்பதி தற்கொலை…!

sathya suganthi

சென்னையில் கொரோனா செலவு எவ்வளவு தெரியுமா? தலை சுற்றும் கணக்கு

Tamil Mint

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

தமிழகம்: இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்! மாற்றங்கள் என்னென்ன?

Lekha Shree

அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்: திருப்பூர் சுப்பிரமணியம்

Tamil Mint