புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு – தமிழகத்தில் எப்போது?


புதுச்சேரியை போல் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

மேலும், தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரியில் வரும் 16ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

Also Read  தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? - விகடன் கருத்துக்கணிப்பு!

இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து நேற்று அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். நாமும் ஏன் பள்ளிகளை திறக்க கூடாது என்ற வகையில்தான் ஆலோசனை இருந்தது.

Also Read  'இந்திய அரசை காணவில்லை' - முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

புதுச்சேரி என்ன முடிவு எடுத்து இருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு துறைசார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகளை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வோம். இன்றைய கொரோனா சூழலைப் பொறுத்து முதல்வர் என்ன வழிவகைகளை தெரிவிக்கிறாரோ அவற்றை பின்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாங்கள் சங்கி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tamil Mint

ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tamil Mint

அரசு விரைவு பேருந்துகள் 6-ந்தேதி இரவு முதல் இயக்கம்: 400 பேருந்துகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

Tamil Mint

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamil Mint

ரேவதியை தொடர்ந்து அப்ரூவராக மாறும் இரு காவலர்கள், பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

திண்டுக்கல் லியோனி… ஆ.ராசா… தயாநிதி மாறன்..! இவர்கள் பேசியது என்ன?

Lekha Shree

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

இந்த சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையின் முன்னோட்டமா? – தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு!

Lekha Shree

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை…!

sathya suganthi