கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதனை தேடும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?


சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவரது யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் அந்த வீடியோ வெளியானதாக மதன் வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கியதால் கோபமடைந்த மதன், அண்ணாமலையிடம் பேசிய ஆடியோ ஆதரங்களை வெளியிட்டு விளக்க வீடியோ ஒன்றை முகநூலில் வெளியிட்டிருந்தார்.

இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இன்னும் பாஜகவினர் பலரின் வீடியோக்கள் 6 மாத காலத்திற்கு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

Also Read  விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

இந்நிலையில், நேற்றைய தினம் முதலே #மதன்_ எங்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. அந்த ஹேஷ்டேகின் கீழ் பலர், “சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யூடியூபர் மதன் எங்கே?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அதோது மதன் அண்ணாமலையிடம் பேசிய மற்றொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஜக நிர்வாகிகள் 15 பேரின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் பிரசாத்தின் வீடியோ மட்டும் 3 உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகனின் வீடியோவும் உள்ளதாகவும் மதன் கூறுகிறார்.

Also Read  தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

அதற்கு அண்ணாமலை, “இந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே உன்னைவிட நிறைய தகவல்கள் எனக்கு தெரியும். எல்லாவற்றையும் என்னால் கேட்டுக்கொள்ள மட்டும்தான் முடியும்” என கூறுகிறார்.

இதைக்கேட்ட பலர், ” பிரசாத்?”, “தனது கட்சியில் இப்படி அக்கிரமங்கள் நடப்பது தெரிந்தும் அண்ணாமலை அமைதியாக இருப்பது ஏன்?” என பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

Also Read  அப்போ உலக சாதனை பெண்மணி: இப்போ ஊழல் ராணி: மாட்டிய ஸ்ரீதேவி.!

கே.டி.ராகவனின் வீடியோ வெளியாகி, அந்த பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், பலர் மதன் எங்கே? அவர் ஏன் அமைதியாக உள்ளார்? அவர் மிரட்டப்பட்டாரா? போன்ற பல கேள்விகளை #மதன்_ எங்கே என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint

கோவை மாவட்டம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்

Shanmugapriya

“சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” – ‘ஜெய் பீம்’ குறித்து ஹெச்.ராஜா பதிவு… லைக் போட்ட சூர்யா..!

Lekha Shree

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்கள்: நிவாரண உதவி வழங்க கோரிக்கை

sathya suganthi

“நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலா திட்டவட்டம்!

Tamil Mint

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்..!

suma lekha

பட்டியலின இளைஞரின் கண்களைக் கட்டி, கம்பால் அடித்து கொடூரமாகத் தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

Tamil Mint

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

Tamil Mint

“தியேட்டர் செல்ல தடுப்பூசியா?” – ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து..!

Lekha Shree

தனியாரிடம் அதிகபட்சமாக ரூ.7க்கு மின்சாரத்தை தமிழக அரசு வாங்குவது ஏன்? – திமுக கேள்வி…!

Devaraj

அரசுடைமையாக்கப்பட்ட சுதாகரன் மற்றும் இளவரசியின் 24 சொத்துக்கள்! தமிழ்நாடு அரசு சொத்துக்கள் என பெயர் மாற்றம்!

Tamil Mint