a

குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!


குடலில் துளைகளை ஏற்படுத்தும் ஆபத்தான வெள்ளை பூஞ்சை பாதிப்பு உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த 49 வயதான புற்றுநோயாளி ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் 2ம் அலை ஒருபுறம் அச்சுறுத்தி கொண்டு இருக்க அதைத்தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புகள் தற்போது கவலை அளித்து வருகிறது.

இதுபோதாதென்று தற்போது கருப்பு பூஞ்சையை விட பாதிப்பை ஏற்படுத்த கூடிய வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னாவில் வெள்ளை பூஞ்சை நோயால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இந்த நோய்க்கான அறிகுறைகள் கொரோனாவுக்கான அறிகுறிகள் போன்றே இருக்கும் எனவும் ஆனால், பரிசோதனையின் மூலம் வேறுபாடுகளை கண்டறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  தேர்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு திருமணத்தின் பாதியிலேயே வந்த பெண்!

முன்னதாக பீகாரில் 19 புதிய கருப்பு பூஞ்சை வழக்குகள் பதிவாகியது. இந்த கருப்பு பூஞ்சையானது ஒரு அரிதான மற்றும் அபாயகரமான தொற்று.

வெள்ளை பூஞ்சை அல்லது கேண்டிடியாஸிஸ் என்பது ‘கேண்டிடா’ என்ற ஈஸ்டால் ஏற்படும் தொற்று ஆகும்.

Also Read  மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கிறது. ஆனால், தோல், நகங்கள், வாய், இரைப்பை, சிறுநீரகங்கள், இடுப்பு அல்லது மூளை ஆகியவற்றையும் பாதிக்கலாம். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்.

வெண்டிலேட்டர் உதவியுடன் போராடும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தொற்றுநோய்களைத் தடுக்க, குழாய்கள் உட்பட ஆக்ஸிஜன் அல்லது வென்டிலேட்டர் உபகரணங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தும் போது கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீரை ஈரப்பதமூட்டிக்கு பயன்படுத்த வேண்டும்.

Also Read  கொரோனா 2ம் அலை எதிரொலி - 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

நோயாளியின் நுரையீரலை அடையும் ஆக்ஸிஜன் பூஞ்சை அல்லது பிற நோய்க்கிருமிகளுடன் நிறைந்திருக்காது என்பதை இது உறுதி செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த வெள்ளை பூஞ்சை தொற்று நோயானது கருப்பு பூஞ்சை ஏற்படுத்தும் பாதிப்புகளை விட பல மடங்கு பாதிப்புகளை உண்டாக்கும் என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு கோடாாியால் வெட்டு – பதைபதைக்க வைக்கும் காட்சி

Tamil Mint

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint