உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தின் பின்னணியில் யார்???


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமையாக நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல 75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மாற்றுவதும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. அண்மையில் வெள்ளநீர் வடியாதது குறித்து முந்தைய அரசுக்கு கடுமையான கேள்விகளை விடுத்திருந்தார் தலைமை நீதிபதி. அதன் தொடர்ச்சியாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

Also Read  குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

Tamil Mint

மாறுவேடத்தில் தப்ப பிளான் போட்ட சிவசங்கர் பாபா…! சென்னைக்கு பிடித்து வந்த போலீஸ்…!

sathya suganthi

பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்…. துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டு‌ சிறை…

Jaya Thilagan

முதுமலையில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

sathya suganthi

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறிய ‘பப்ஜி’ மதன்…!

Lekha Shree

“நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இணைந்தால் மாபெரும் சக்தியாக உருவாகும்” – கருணாஸ்

Lekha Shree

வான்டெட்டாக சிக்கிய வாலிபர் – காவலர் மீது சாக்கடை நீரை வீசி போதையில் அலப்பறை!

Lekha Shree

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு

Tamil Mint

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint

17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

Tamil Mint