a

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 65 தொகுதிகளையும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.

16வது சட்டசபை எதிர்கட்சிகள் வரிசையில் அதிமுக இடம் பெற உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Also Read  மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? - தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

இது தொடர்பான அறிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிமுக கொறடா தேர்ந்தெடுக்கப்படுவதுடன், 16-வது சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரையும் வழங்கப்பட உள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Also Read  சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

ஏற்கனவே, தமிழக சட்டசபையில் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. இருந்திருக்கிறது. தற்போது, 4-வது முறையாக அந்த இடத்திற்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடம்! வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

Tamil Mint

ஹெலிகாப்டரில் வந்த கமல்… பார்க்க குவிந்த மக்கள்!

HariHara Suthan

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் – ஸ்டாலின்!

Devaraj

வாழை கழிவுகளில் விமான பாகம் தயாரிக்கலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

Tamil Mint

திருத்தணியில் பாஜக தலைவர் முருகன் அதிரடி கைது

Tamil Mint

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

Tamil Mint

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint