a

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?


சின்னத்திரை நடிகை ஜெனிப்பர் சில தினங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்வதாக கூறி நவீன் குமார் என்பவர் ஏமாற்றிவிட்டதாகவும், அடித்து துன்புறுத்தி மிரட்டுவதாகவும் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த வழக்கில் ஜெனிப்பர் தரப்பில் மட்டுமே என்ன நடந்தது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குற்றம்சாட்டப்பட்ட நவீன் குமார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவரும் காவலர் ஆணையரிடம் ஜெனிப்பர் மீது நம்ப வைத்து ஏமாற்றியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.

நவீன் குமார் அளித்துள்ள புகாரில், சன் டிவியின் வானத்தைப் போல சீரியலில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். அந்த சீரியலில் தான் துணை நடிகையாக செம்பருத்தி சீரியலில் நடித்து பிரபலமான ஜெனிப்பர் இணைந்துள்ளார்.

Also Read  முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

அவரது கால்ஷீட் குறித்த அப்டேட்களை கேட்க நவீனுக்கு போன் செய்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்குமான பழக்கம் காதலாக மாற கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இருவரும் மோதிரம் மாற்றி தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சமயத்தில் தான் ஜெனிப்பர் அடிக்கடி நீதிமன்றம் சென்று வருவதை கவனித்துள்ளார் நவீன். அப்போது தான் ஜெனிப்பருக்க்கு கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணம் நடந்ததும், கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்துக்கு அப்ளை செய்ததும் நவீனுக்கு தெரிய வந்துள்ளது.

Also Read  அசுரன் பட நடிகைக்கு கொரோனா…!

உடனே அவர் இதுகுறித்து ஜெனிப்பரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார், அதற்க்ய் ஜெனிப்பர் அவரை நேரில் அழைத்து திருமணம் செய்து கொள்ள மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக நவீன் அளித்த புகாரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஜெனிப்பர் கீழே விழுந்ததாகவும், அதில் தான் முகத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 14-ம் தேதி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு ஜெனிப்பர் மிரட்டியதாகவும், அப்போது தான் அவர் பணத்துக்காக தன்னுடன் பழகியது பற்றி தெரியவந்ததாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.காதலித்த சமயத்தில் மட்டும் ஜெனிப்பருக்காக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.

Also Read  விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

ஜெனிப்பர் குறித்து மணலி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, எனக்கு முன்பே அவர் வாராகி என்பரின் உதவியுடன் தன் மீது புகார் அளித்து விட்டதாக நவீன் கூறுகிறார். இந்த தகவல்கள் அனைத்தும் நவீன் அளித்த புகாரில் இடம்பெற்றுள்ள தகவல்கள்.

உண்மையில் யார் மீது தவறு? ஜெனிப்பர் சொல்வது உண்மையா இல்லை நவீன் சொல்வது உண்மையா? போலீஸ் விசாரணைக்கு பின்பே உண்மை தெரியவரும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்…!

HariHara Suthan

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

HariHara Suthan

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்… தள்ளிப்போகிறதா ‘டாக்டர்’ ரிலீஸ்?

malar

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

Lekha Shree

பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்க வரும் புதிய ஷோ… அட நடுவர்கள் இவர்களா?

Lekha Shree

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan