அபாய கட்டத்தில் பூமி – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!


அதிவிரைவாக பரவும் டெல்டா போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, 98 நாடுகளில் பரவி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ், பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது என்றார்.

தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர் என்றும் இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது என்றும் கூறினார்.

Also Read  உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும் என்றும் துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதனோம் கேப்ரியாசஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக்கூறி அவர், இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம் என்றும் அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு - பேக்கரியின் பலே ஐடியா...!

குறைந்தது, செப்டம்பருக்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்த அவர், தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம் என ஆலோசனை வழங்கினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj

கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த ரொனால்டோ…! முரண்பாடு குறித்து மக்கள் விமர்சனம்!

Lekha Shree

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

யூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை!

Lekha Shree

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

Tamil Mint

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

Shanmugapriya

சம்பளம் தரவே இல்லைங்க…! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்…!

sathya suganthi

நிலத்தடி நீர் மாசு…! குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்…!

sathya suganthi