பாலியல் பலாத்காரம் செய்த ஹர்திக் பாண்டியா, ராஜிவ்… தாவூத் உதவியாளர் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!


முக்கிய புள்ளிகள் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் உதவியாளாரான Riyaz Bhatiயின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் Riyaz Bhatiயின் மனைவி Rehnuma Bhati, மும்பை காவல்துறையில் தனது கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Dawood Ibrahim Aide Naim Khan, Wife Arrested For Possession Of AK-56 Rifle

அவரது புகாரில், கணவர் Riyaz Bhatiயின் பெயர் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் முனாஃப் படேல், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான ராஜீவ் சுக்லா மற்றும் பிருத்விராஜ் கோத்தாரி ஆகியோரது பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக Rehnuma Bhati குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் Riyaz Bhati, வணிக கூட்டாளிகள் மற்றும் பிற “உயர்ந்த” நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்று தன்னை வற்புறுத்தியதாகவும் Rehnuma Bhati குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஆதார் இல்லை என்றால் கொரோனா தடுப்பூசி கிடையாதா…? ஆதார் ஆணையம் விளக்கம்

பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகவரியையோ அல்லது சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட தேதிகள் அல்லது இடத்தையோ Rehnuma Bhati தன் புகார் மனுவில் குறிப்பிடவில்லை என்றாலும், பாண்டியா மற்றும் முனாஃப் படேலை கிரிக்கெட் வீரர்கள் என்று அடையாளம் கண்டு, ராஜிவ் சுக்லாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் என்றும் விவரித்துள்ளார்.

Wife of Dawood's aide accuses Hardik Pandya, Rajiv Shukla of rape

மேலும், அவர் அளித்த புகார் மனுவில் பிருத்விராஜ் கோத்தாரிக்கு எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், Rehnuma Bhati பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, விண்ணப்பத்தில் அவரைக் குறிப்பிடுவதை உறுதிப்படுத்தி இருந்தார்.

“நான் காவல்துறையினரை எஃப்ஐஆர் பதிவு செய்ய முயற்சித்து வருகிறேன், ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவே இல்லை. நான் செப்டம்பர் மாதத்தில் புகார் மனு அளித்தேன், தற்போது நவம்பர் மாதமாகியும் அவர்கள் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறிய Rehnuma Bhati “நான் பல முறை போலீஸ் அதிகாரிகளின் பல்வேறு நிலைகளைப் பின்தொடர்ந்தேன். லஞ்சம் கொடுக்க சொன்னார்கள். நான் ஏன் பணம் தரவேண்டும்? நான் என் இடத்தில் சரியாக இருக்கிறேன். அவர்கள்தான் குற்றவாளிகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 24, 2021 அன்று மும்பை காவல் நிலையத்தில் Riyaz Bhatiயின் மனைவி அளித்த புகாரின் நகலை சமூக ஊடகப் பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read  யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது - நேபாள் பிரதமர்

அதில், தனது கணவர் Riyaz Bhati , தொழிலதிபர் பிருத்விராஜ் கோத்தாரி, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் முனாஃப் படேல் மற்றும் காங்கிரஸ் தலைவரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான ராஜீவ் சுக்லா ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு தன்னை ஆளாக்கினார்கள் என்று Rehnuma Bhati புகார் அளித்துள்ளார்.

மேலும், முனாஃப் படேல் கான்டினென்டல் ஹோட்டலிலும், ஹர்திக் பாண்டியா ட்ரைடென்ட்( Trident) என்ற ஹோட்டலிலும் தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தனர் என்றும், பாண்டியாவும் அவரது இரண்டு நண்பர்களும் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ள Rehnuma Bhati, ராஜீவ் சுக்லாவும் அவரது நண்பர்களும் தன்னை அடித்ததாக குற்றம் சாட்டினார்.

Also Read  "மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்" - பிசிசிஐ துணை தலைவர்

ராஜீவ் சுக்லா மற்றும் அவரது நண்பர்களுக்கு முன்னால் ஆடையின்றி நிர்வாணமாக தன்னை நடனமாட வைத்தார்கள் என்றும், அதன் பிறகு அவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதனை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து ராஜீவ் சுக்லா வைத்திருந்ததாகவும் Rehnuma Bhati தெரிவித்துள்ளார்.

Rehnuma Bhati யின் இந்த புகார் மனு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை, இந்த அறிக்கைகளில் வெளிவந்த குற்றச்சாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருவது பல்வேறு சந்தேகத்திற்கு வழிவகுப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்த மத்திய அரசு ஒப்புதல்? – மத்திய அமைச்சர் விளக்கம்..!

Lekha Shree

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற விவகாரம்: 1 வருடத்திற்கு பின் சரணடைந்த குற்றவாளி..!

Lekha Shree

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!

Shanmugapriya

டெல்லியில் விவசாயி உயிரிழந்த சம்பவம்: 7 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Tamil Mint

ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Devaraj

ட்ரெண்டிங்கில் கே.டி. ராகவன் வீடியோ: தெளிவாக அறிக்கை கொடுத்து எஸ்கேப்-பான அண்ணாமலை.!

mani maran

“பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Lekha Shree

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு… 40 பேர் மாயம்..!

Lekha Shree

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint