a

தமிழகத்தில் நிஜமாவே தாமரை மலர்ந்துருமோ..? பாஜகவின் முன்னிலை நிலவரம் இதோ..


தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை முதலே திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 12 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 140 இடங்களிலும், அதிமுக கூட்டணி 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது..

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

திமுக கூட்டணியை பொறுத்தவரை, திமுக 111 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதியிலும், மதிமுக, விசிக தலா 4 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா 2 இடங்களிலும், கொமதேக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

இதே போல் ஆளும் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அதிமுக 80 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம், உதகை, நாகர்கோயில், துறைமுகம், நெல்லை ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்..

பாஜகவின் தமிழக தலைவர் எல். முருகன் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.. இதே போல் மற்ற 4 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் இந்த முறை தமிழகத்தில் உண்மையிலேயே தாமரை மலர்ந்துவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.. எனினும் இன்னும் பல சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

Also Read  திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸை தடை செய்யவேண்டும்: அ.தி.மு.க மூத்த தலைவர்

Tamil Mint

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்பு… அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Tamil Mint

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

“ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

Ramya Tamil

நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!

sathya suganthi

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

Lekha Shree

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 7%…!

Devaraj

“தமிழ்நாட்டின் வெப்பத்தை சமாளிக்க சிறப்புத் திட்டம் வேண்டும் ” – பாமக நிறுவனர் ராமதாஸ்

Shanmugapriya