முல்லை பெரியாறு அணை விவகாரம்..! நடிகர் பிரித்விராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


முல்லை பெரியாறு அணை உடையும் ஆபத்து இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதால் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ், உன்னி முகுந்தன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை தொடர்வதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை நெருங்கியுள்ளது.

வழக்கமாக அணையின் நீர்மட்டம் உயரும்போது அணை இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கேரளாவில் சில அமைப்புகள் மக்களிடையே பீதியை பரப்புவதுண்டு.

அதே போல் இந்த முறையும் சமூக வலைதளங்களில் இவ்வாறு சிலர் பிரசாரம் செய்தனர். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

Also Read  குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…!

அந்த வரிசையில் மலையாள முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ், உன்னி முகுந்தன் ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதுரை, கம்பம், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பிரித்விராஜை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. சமூக வலைதளங்களில் இப்படி பொய்யான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் எம்.எல்.ஏ எம்.எம் மணி கூறினார்,

அதற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் பீதி ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Also Read  பெண்களும் அர்ச்சகராகலாம்…! - அமைச்சர் சேகர் பாபு!

மேலும், கேரளா பாசனத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில், “நடிகர் பிரித்விராஜ் போன்ற பிரபலங்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்க கூடாது. மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்க வேண்டாம்” என பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கேரள போலீசார் இதுவரை யார் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளதால் தற்போது நடிகர்கள் பிரித்விராஜ், உன்னி முகுந்தன் உள்பட அனைவரும் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read  வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

Tamil Mint

‘பிக் பாஸ்’ கவின் படத்திற்காக பாடல் பாடிய ஹீரோ…!

Lekha Shree

இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ராஜநாகம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

‘Villain of Pushpa’ – நடிகர் பகத் பாசிலின் மிரட்டலான லுக் சமூக வலைத்தளங்களில் வைரல்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி – அரசு மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்!

Devaraj

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

Lekha Shree

”இளவரசேசசச ஜெயம்ரவி என் பணி முடிந்தது” – நடிகர் கார்த்தி ட்வீட்..!

suma lekha

‘மின்னும் அழகு..!’ – நடிகை ஜனனியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

Lekha Shree

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!

Shanmugapriya

பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree