a

வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா?


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 21வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 6 மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளன.

முதல் 20 லீக் ஆட்டங்கள் மும்பை மற்றும் சென்னையில் நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இரு அணிகளும் முதல்முறையாக அகமதாபாத் ஆடுகளத்தில் விளையாடுவதால் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நடந்து கொள்வது மிக முக்கியம். கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

Also Read  பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

கேப்டன் இயான் மார்கன் பார்மில் இல்லாதது அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

அதே சமயம் பஞ்சாப் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் 2ல் வெற்றியும் கண்டுள்ளது. கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Also Read  10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல - மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

கேப்டன் கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், ஷாருக்கான் ஆகியோர் அணியின் நம்பிக்கையாக திகழ்கின்றனர்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரசல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோர் கணிசமான ரன்களை குறிப்பது கொல்கத்தாவுக்கு அவசியம்.

Also Read  சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இதுவரை 27 முறை ஐபிஎல் தொடர்களில் நேருக்கு நேர் மோதி உள்ள இரு அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 முறையும் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 முறையும் வெற்றி கண்டுள்ளன. இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

டெல்லி – பஞ்சாப் இன்று மோதல்!

Devaraj

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

Devaraj

சென்னை – மும்பை இன்று பலப்பரிட்சை!

Lekha Shree

ஐபில் தொடரில் அதிவேக சதம் – தெறிக்க விட்ட வீரர்களின் பட்டியல்

Jaya Thilagan

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் திடீர் விலகல்…! காரணம் இதுதான்…!

Devaraj