a

சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்?


விறுவிறுப்பாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை அணி பலம் பலஹீனம்

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் டெல்லியிடம் தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, டு பிலேசிஸ், எம்எஸ் தோனி உள்ளிட்ட அதிரடி நட்சத்திரங்கள் அணியில் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

ருத்துராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டத்தை வலுவாக அமைத்தால் சென்னை அணியின் ஸ்கோர் கணிசமாக உயரும். இதுவரை அவர் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை.

இன்றைய ஆட்டத்தில் டு பிளேஸிஸ் உடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். பந்துவீச்சில் கடந்தமுறை தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் சென்னை அணியின் வெற்றி மிக எளிதாக கிட்டியது.

Also Read  ராஜஸ்தானில் இருந்து கழன்ற மற்றொரு வீரர் - நெருக்கடியில் சஞ்சு சாம்சன்!

அதே பாணி இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. முதல் ஆட்டத்தில் எம்எஸ்தோனி டக் அவுட் ஆன நிலையில் 2-வது ஆட்டத்தில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆதலால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கும் பட்சத்தில் பெரிய ஸ்கோர் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் பஞ்சாப் இடம் தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதால் அது அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்தேவ் உணத் கட், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் சென்னை அணிக்கு நெருக்கடியை அளிக்கலாம்.

Also Read  ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா - டெல்லி அணி அபார வெற்றி!

பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியில் ரன் குவிக்க கடுமையாக திணறினார்.

அதேபோன்று கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய ராகுல் தேவ் ஆகும் இந்த முறை ரன் குவிக்க திணறுவது அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் ராஜஸ்தானின் ஸ்கோர் அதிகமாக வாய்ப்புண்டு.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி கண்டுள்ள நிலையில் 3-வது ஆட்டத்தில் வெற்றி பயணத்தை தொடர இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இன்றிரவு நடைபெறும் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது

Also Read  கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் நேருக்கு நேர் மோதி உள்ளன இதில் அதிகபட்சமாக சென்னை அணி 14 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது

உத்தேச அணி

Chennai Super Kings: Ruturaj Gaikwad, Faf du Plessis, Moeen Ali, Suresh Raina, Ambati Rayudu, Sam Curran, MS Dhoni, Ravindra Jadeja, Dwayne Bravo, Shardul Thakur, Deepak Chahar.

Rajasthan Royals: Yashasvi Jaiswal, Jos Buttler, Sanju Samson, Shivam Dube, David Miller, Riyan Parag, Rahul Tewatia, Chris Morris, Jaydev Unadkat, Chetan Sakariya, Mustafizur Rahman


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்?

Jaya Thilagan

வார்னருக்கு செக் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்! வெளியில் உட்கார வைக்கப்படுவாரா – புதிய கேப்டன் யார்?

Lekha Shree

ஐபிஎல் 2021: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரிட்சை!

Jaya Thilagan

வெற்றி நடை போடும் சி.எஸ்.கே. – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Jaya Thilagan

ஐபிஎல்-ஐ குறிவைக்கும் கொரோனா – சென்னை அணியில் 2 பேருக்கு தொற்று உறுதி..!

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல் – வெற்றி யாருக்கு?

Devaraj

பலம் வாய்ந்த பெங்களூரை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

Lekha Shree

பஞ்சாபை சமாளிக்குமா ஐதராபாத்?

Devaraj

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

கே.எல். ராகுலின் பொறுப்பான ஆட்டம் – பெங்களூரை வென்ற பஞ்சாப் கிங்ஸ்!

Devaraj