தனுஷின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?


கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்.

இவருடன் சேர்ந்து நடிக்க பலர் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தனுஷ் நடிகரும் தனது மாமனாருமான ரஜினிகாந்துடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என நீண்ட நாளாக காத்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த காலா படத்தை தனுஷ் தயாரித்தார். அப்போது அவர் அப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ரஜினி இப்பொழுது வேண்டாம் என கூறிவிட்டதாக தகவல் வெளியாகியது. தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Also Read  'அசுரன்' ரீமேக் படத்திற்காக 'பருத்திவீரன்' நாயகி எடுத்த ரிஸ்க்…!

அடுத்து தலைவர் 169 மற்றும் தலைவர் 170 ஆகிய படங்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 169வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினியின் 170வது படத்தை தனுஷ் இயக்க வேண்டும் அல்லது அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என பல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Also Read  குழந்தைக்கு தனித்துவமான பெயர் வைத்த ஸ்ரேயா கோஷல்...! முதன்முறையாக குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ...!

பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் தனுஷ். இதன் 2ம் பாகத்தை ரஜினியை ஹீரோவாக வைத்து எடுக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து இப்பொழுது இருவரது ரசிகர்களும் இருவரையும் ஒன்றாக திரையில் காண ஆவலாக உள்ளதாக அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். மேலும், தனுஷின் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறிவிடும் என அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read  விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் நயன்தாராவின் 'நெற்றிக்கண்'…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மொட்டை மாடியில் குதூகலமாக போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்… தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்…!

malar

வெளியானது ‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

ரம்ஜான் அன்று வெளியாகும் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!

Lekha Shree

நடிகர் விஜய் பிறந்தநாள் – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Lekha Shree

விக்ரமின் சாமுராய் பட கதாநாயகி முதல் முறையாக வெளியிட்ட அவரது குழந்தையின் வீடியோ இதோ..!

HariHara Suthan

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

ஊரடங்கில் களத்தில் வேறுமாறி கலக்கும் இளம் நடிகை…! குவியும் வாழ்த்து…!

sathya suganthi

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

அப்பாவானார் ஆர்யா – நடிகர் விஷால் நெகிழ்ச்சி ட்வீட்

suma lekha

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Lekha Shree