‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் பங்கேற்கும் சனம் ஷெட்டி?


தென்னிந்திய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, பிக் பாஸ் தமிழின் சமீபத்திய சீசனில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார்.

மேலும், ரசிகர்களிடமிருந்து ஏராளமான ஆதரவையும் பெற்றார் சனம் ஷெட்டி. சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, தனது ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பல ரசிகர்கள் #AskSanam என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ட்வீட் செய்து அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அதில் ஒருவர், “பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனுபவம் குறித்தும், சக போட்டியாளர்களால் கேலி செய்யப்படுவதை எவ்வாறு கையாண்டீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு சனம், “நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எந்தவொரு வெற்றியும் இல்லாமல் போராடி வந்தேன். எனவே, பிக் பாஸ் எனக்கு வாய்த்த நல்ல வாய்ப்பாக பார்த்தேன். என் கடினமான காலங்களில் நான், இது என் பொன்னான வாய்ப்பு… நான் ஒருபோதும் இதை தவறவிட மாட்டேன் என்று கூறிக்கொள்வேன்” என பதிலளித்தார்.

Also Read  தாலி அணியாமல் இருப்பதற்கு 'இதுதான்' காரணம்! - உண்மையை போட்டுடைத்த 'குக் வித் கோமாளி' கனி!

அதுபோல் மற்றொரு போட்டியாளர், “குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா?” என கேட்டார். அதற்கு சனம், கண்டிப்பாக என பொருள்படும்படி, “ஒய் நாட்” என பதிலளித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். சனம் ஷெட்டிக்கு சமையல் என்றால் இஷ்டம் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நன்கு அறிவர்.

Also Read  “எத்தனை நாளைக்கு பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸையே குறை சொல்வீங்க?” - பட்டைய கிளப்பும் மாஸ்டர் பட டெலிடட் சீன்ஸ்!

எனவே, தற்போது அளித்த பதில் வாயிலாக சூப்பர்ஹிட் சமையல் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க பச்சை கோடி காட்டியுள்ளார்.

இருப்பினும், சீசன் 3 தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராததால், வரவிருக்கும் சீசனுக்கு அவர் அழைக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read  முதல் முறையாக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் 'மாஸ்' ஹீரோ?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…!

Bhuvaneshwari Velmurugan

ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?

Lekha Shree

“தலைவி படத்திற்கு தடைகோர உரிமையில்லை”… ஜெ.தீபாவுக்கு ஏ.எல்.விஜய்யின் திட்டவட்டமான பதில்…!

Tamil Mint

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்… தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!

Devaraj

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

“ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” – வைரலாகும் ரஜினி – மோகன் பாபு மாஸ் புகைப்படங்கள்!

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

Lekha Shree

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan