‘ஓமைக்ரான்’ – வேகமாய் பரவும் புதிய கொரோனா திரிபு… தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா?


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபான ஓமைக்ரானுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான பைசர் மற்றும் பயோடெக் தெரிவித்துள்ளன.

இதுவரை ஏற்பட்ட திரிபுகளில் இது மிகவும் அசாதாரணமானது என்றும் மற்ற திரிபுகளில் இருந்து இது நிறைய விஷயங்களில் வேறுபட்டுள்ளது என்றும் தென் ஆப்பிரிக்காவின் தொற்றுநோய் மற்றும் அதன் ஆய்வுக்கான மைய இயக்குனர் தெரிவித்தார்.

Also Read  திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

மேலும், இதுவரை வந்த திரிபுகளில் இந்தத் திரிபு புதிய பரிணாமமாக உள்ளதாகவும் இன்னும் பல திரிபுகள் அல்லது பிறழ்வுகள் இதிலிருந்து உருவாகலாம் எனவும் கூறினார்.

இதனால், இந்த திரிபு கவனிக்கப்படத்தக்க வரிசையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றால் தென் ஆப்பிரிக்காவில் 100 பேரும் போட்ஸ்வானவில் 4 பேரும் பாதிக்கப்பட்டனர். மேலும், ஹாங்காங் பகுதியில் சுற்றுலா பயணிகள் 2 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த திரிபு மிக தீவிர பொது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், இந்த புதிய திரிபு இதற்குள் ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  'அடேங்கப்பா..!' - 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள மறைந்த இளவரசர் பிலிப்பின் உயில்! என்ன காரணம்..!

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான போக்குவரத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இஸ்ரேல், துருக்கி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில், இந்த புதிய கொரோனாவை, உலக அளவில் இப்போது சந்தையில் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தடுக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

Also Read  "ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

ஆனால், இந்த கொரோனாவுக்கு எதிராக 100 நாட்களில் தடுப்பு மருந்து கண்டறிந்துவிடுவோம் என்று சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஓமைக்ரான் வைரஸின் வீரியத்தை இப்போதுள்ள தடுப்பு மருந்துகள் தடுக்குமா என்ற முழுவிவரம் 4 வார ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தான்: மரணத்தின் விளிம்பில் லட்சக்கணக்கானோர்… எச்சரிக்கும் ஐ.நா செயலாளர்..!

Lekha Shree

வீதிக்கு வந்து மிரள வைத்த 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கள்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

கூட்டம் கூட்டமாக செதுத்து ஒதுங்கிய டால்பின்கள்…! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

Devaraj

சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்… எச்சரிக்கும் நாசா..!

suma lekha

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை…!

sathya suganthi

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் – 71 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

10 வருடங்களாக கல்லறைக்கு செல்லும் பெண்மணி… விசித்திரம் நிறைந்த பின்னணி!

Lekha Shree

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடுப்பு! அதிர்ச்சியில் சீன மக்கள்!

Tamil Mint

இன்று முதல் நோபல் பரிசுகள்

Tamil Mint

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree