வடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’?


தலைநகரம் 2 தற்போது உருவாகவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர் வடிவேலு இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் சுராஜ் இயக்கும் படங்கள் என்றாலே அதில் காமெடி அசத்தலாக இருக்கும். அதிலும் அவர் இயக்கிய தலைநகரம் திரைப்படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகளால் இப்போதும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நாய் சேகராக, மாமன் மகள் என நினைத்து கதாநாயகியை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் வடிவேலு. குறிப்பாக மிகவும் பிரபலமான ‘நான் ஜெயிலுக்கு போறேன்’ என்கிற காட்சி இடம் பெற்றது இப்படத்தில்தான். இப்படத்தில் வடிவேலு வரும் அனைத்து காட்சிகளுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Also Read  "இது வேற லெவலா இருக்கே!" - 'Money Heist' வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

சில காரணங்களால் வடிவேலு கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது அந்த பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார் வடிவேலு.

Vadivelu Is A Don - Thalai Nagaram - YouTube

இந்நிலையில், தலைநகரம் 2 தற்போது உருவாகவுள்ள நிலையில், முதல் பாகத்தில் நடித்த சுந்தர்.சி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Also Read  வடிவேலு நடிக்க இருந்த கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி..! வெளியான சுவாரசிய அப்டேட்..!

ஆனால், இப்படத்தை சுராஜ் இயக்கவில்லை. முகவரி, தொட்டி ஜெயா, போராளி, இருட்டு ஆகிய படங்களை இயக்கிய இசட் துரை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில், தாணு உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் நடிகர் வடிவேலு இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read  தொகுப்பாளராகும் நடிகர் வடிவேலு? வெளியான 'Wow' அப்டேட்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

RRR படப்பிடிப்பு நிறைவு…விரைவில் புதிய அப்டேட்..!

suma lekha

“நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்!” – சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் முதல் பதிவு..!

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் குஷி

HariHara Suthan

விஜயின் இதுவரை கண்டிராத பள்ளி குரூப் போட்டோ – நடிகர் ஸ்ரீநாத் டுவீட்

sathya suganthi

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிக்பாஸ் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய விஜய் பட நாயகி…!

Lekha Shree

நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்? வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடிய நடிகை ராஷி கண்ணா! – வைரல் வீடியோ!

Shanmugapriya

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree