ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை முந்துமா ‘அஜித்தின்’ வலிமை?


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அதே நாளில் அஜித்தின் வலிமை வெளியானால் அண்ணாத்த படத்தை வலிமி முந்துமா/ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் நான்குக்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி அத்தனை நடிகர்களின் படங்களும் வெற்றி பெற்று சரித்திரம் படைத்த கதைகள் உண்டு.

ஆனால், ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் அது இரு படங்களின் வசூலையும் பாதிக்கும் என கருதப்பட்டது.

Also Read  பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே - வின் "டான்" படப்பிடிப்பு!

அந்தவகையில் 2019ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விசுவாசமும் வெளியானது.

வசூல் குறையும், ஏதாவது ஒரு படம் தோல்வி அடையும் என பலர் கருதினர். ஆனால், அதற்கு மாறாக இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

பேட்ட வெளியான முதல் நாளில் சென்னையில் 1.03 கோடி வசூலித்தது. அதேபோல் விசுவாசம் முதல் நாளில் 97.93 லட்சங்கள் வசூலித்தது. இது இரண்டுமே ஏறக்குறைய ஒரே வசூல் தான்.

சென்னையில் பேட்ட படத்தின் மொத்த வசூல் சுமார் 14.3 கோடிகள். அதுபோல விசுவாசம் 12.18 கோடிகள் வசூலித்தது.

Also Read  'என்ன சொல்ல போகிறாய்' - 'குக் வித் கோமாளி' அஷ்வினின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்..!

ஆக்ஷன் ஜானரில் வெளியான படம் பேட்ட. குடும்ப பின்னணியில் உருவான படம் விசுவாசம். பேட்ட ஏ சீனர்களில் பட்டையை கிளப்பியது என்றால் விசுவாசம் பி, சி சென்டர்களில் பட்டையைக் கிளப்பியது.

வசூல் ரீதியாக உலக அளவில் பேட்ட முதலிடத்தையும் விசுவாசம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த, வலிமை ஆகிய 2 படங்கள் வெளியானால் வலிமை வசூல் ரீதியாக அண்ணாத்த படத்தை முந்த முடியுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read  மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை... ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

இதற்கு காரணம் இந்த முறை வலிமை ஆக்சன் பின்னணியிலும் அண்ணாத்த குடும்ப பின்னணியிலும் தயாராகிறது.

இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்றாலும், யார் வசூலில் முந்தப் போகிறார்கள் என திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

கொரோனா நிவாரண நிதிக்காக தன்னுடைய தீம் இசையை ஏலம் விடும் ஜிப்ரான்..!

Lekha Shree

பாடகியாக மாறிய பிக்பாஸ் ஜூலி..! வீடியோ இதோ!

Lekha Shree

மணிரத்தினத்தின் ‘நவரசா’ வெளியீட்டு தேதி குறித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree

ஆடுகளம் படத்தில் த்ரிஷா…! இது வரை யாரும் கண்டிராத புகைப்படங்கள்…!

sathya suganthi

சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

கொரோனா உணர்த்திய பாடம் – ஹிப் ஹாப் ஆதி உருக்கமான பதிவு

Devaraj

மாப்பிள்ளை யார்?… திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜே ஜாக்குலின்…!

Tamil Mint

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree