2022-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவித்துள்ள விப்ரோ நிறுவனம்..! பிரெஷ்ஷர்களுக்கு நல்ல வாய்ப்பு..!


2022-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்து விப்ரோ நிறுவனம் இணையவழி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் ஐடி துறைகளில் மீண்டும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு முதல் தங்களது நிறுவனங்களில் அதிகம் பேரை பணியமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

Also Read  பதக்க மழையில் நனையும் இந்தியா..! பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர்கள்..!

கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த ஐடி நிறுவனங்கள் அதிரடி வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளன. இதற்காக விப்ரோ நிறுவனம் ஆண்டுக்கு 3.5 லட்ச ரூபாய் சம்பளத்தில் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில், 2022-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்து விப்ரோ நிறுவனம் இணையவழி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Also Read  மதுபாட்டிலில் செத்த பல்லி… பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ.!

அந்த அறிக்கையில், பிஇ/பிடெக், எம்இ/எம்டெக் ஆகிய படிப்புகளை நிறைவு செய்தவர்கள் உடனடியாக விப்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்.

அப்படி விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளநிலை, முதுகலை படிப்புகள் வரை அனைத்திலும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

மேலும், விண்ணப்பதாரர்களின் வயது கண்டிப்பாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். பூடான் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களும் தங்களது குடியிருமை சான்றிதழுடன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் - இந்திய அணி அபார வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Lekha Shree

NITT -வேலைவாய்ப்பு அறிவிப்பு… தகுதியுள்ளவர்கள் விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

மருத்துவமனையாக மாறுகிறது ‘லீ மெரீடியன்’ நட்சத்திர ஓட்டல்…!

Lekha Shree

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

suma lekha

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு.. தரையிறங்குவதில் சிக்கல்..! நடந்தது என்ன?

Lekha Shree

நாகர்கோவில்: பேருந்திலிருந்து நரிக்குறவர்களை இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட்!

suma lekha

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil