a

“மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே” மோடிக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!


மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 2016 ஆம் ஆண்டு தேர்தலை விட 2 இடங்களில் கூடுதலாக வென்றுர் 213 இடங்களோடு ஹாட்ரிக் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஆட்சியை தக்கவைத்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடனே தொடர்ந்து பாஜகவிற்கு, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கும் எதிராக மம்தா வலுவாக காய்களை நகர்த்தி வந்தார்.

பாஜகவும் சும்மா இருக்காமல், சிபிஐயை அனுப்பி, நாரதா கேஸில் 4 திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கைது செய்தது.

ஆனால் தனது கட்சி எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும் என்றால் தன்னை முதலில் கைது செய்யுங்கள் என்று நேராக சிபிஐ அலுவலகத்திற்கே சென்று மம்தா சவால் விடுத்தார். 6 மணி நேரம் சிபிஐ அலுவலகத்திலேயே நின்று மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

Also Read  வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது - மோடி உருக்கம்

யெஸ் புயல் குறித்த பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக எம்எல்ஏவிற்கு என்ன வேலை என்று கேள்வி கேட்ட மம்தா, சுயமரியாதையே முக்கியம் என்று கூறி, மீட்டிங்கையே புறக்கணித்துவிட்டு கிளம்பி சென்றார்.

அடுத்ததாக, மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று மோடி அரசு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் பதவியில் இருந்து அந்த ஐஏஎஸ் அதிகாரியை விலக வைத்த மம்தா, அவரையே தனது தலைமை ஆலோசகராக நியமித்தார்.

Also Read  `மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஏன் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு?` - மமதா பானர்ஜி ஆவேசம்

இது போல், மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துவிட்டன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மிஸ்டர் பிரதமரே… பிஸியான பிரதமரே… மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே… என்னுடைய கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது… என்னுடைய கதையை உங்களால் ஒரு போதிலும் முடிக்க முடியாது. எனக்கு பயம் இல்லை… என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

முடிந்தால் செய்து பாருங்கள்.. ஒவ்வொரு மாநிலமும் என்னுடன் நிற்கும் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

இந்தநிலையில், மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக #BengaliPrimeMinister என்ற ஹேஷ்டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya

தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

Lekha Shree

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

ஆக்சிஜன் விநியோகத்தில் குளறுபடி – 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

பிரதமர் பாராட்டிய தமிழக சாதனையாளர்: யார் இந்த யோகநாதன்?

Devaraj

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya

ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உங்களுக்கான முக்கிய தகவல்!

Shanmugapriya

ஒன்றல்ல…இரண்டு கின்னஸ் சாதனை புரிந்த இந்திய ராணுவ வீரர்…! என்ன சாதனை தெரியுமா…?

Devaraj

பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

Lekha Shree

எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ஒரு கோடி குறைந்தது! – ஓபிஎஸின் சொத்து மதிப்பு 509% அதிகரிப்பு! – முழு விவரம்!

Shanmugapriya

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj