கொரோனா தடுப்பூசி போடாவிடில் ஊதியம் இல்லை – அதிரடி உத்தரவுப் போட்ட ஆட்சியர்…!


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் முதன்மையான தீர்வு என மருத்துவத்துறை கூறுகிறது.

அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது என ஆட்சியர் அஷீஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழை காண்பித்தால்தான், அடுத்த மாதத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  உத்தரகாண்ட்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் தினமும் வந்து தன் குட்டிகளை தேடும் தாய் நாய்! - மனதை உருக்கும் சம்பவம்!

இதனால், ஜூன் மாதத்துக்கான சம்பளம் போடும்போது தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமின்றி, அரசின் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்ற தகவலையும் சமர்ப்பிக்கும்படி பல்வேறு துறை தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Also Read  கொரோனா எதிரொலி - கருவுறுவதற்கு கட்டுப்பாடு…!

உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்கள் குறித்து ஆராய்ந்தபோது, அவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

’மேகதாது அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக’: கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை!

mani maran

டெல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

280 நிறுவனங்கள் திவால்…! – மத்திய அமைச்சர் தகவல்

Devaraj

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா

Tamil Mint

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி – அரசு மருத்துவமனையில் அவலம்

Devaraj

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree