தொலைக்காட்சி தொடர்களில் பெண்கள் நடிக்கத் தடை!!! தலிபான்கள் அறிவிப்பால் சர்ச்சை…


ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில்  பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து புதிய தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.

Also Read  உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில்  பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தவிர ஷரியா சட்டங்கள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மதிப்புகளுக்கு எதிராக கருதப்படும் படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதத்தை கொச்சைப்படுத்தும், ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மரண பீதியில் செய்தி வாசித்த செய்தியாளர்: காரணம் என்ன தெரியுமா.?

mani maran

சீன தொழிலதிபருடன் நெருங்கிய தொடர்பு – இதுதான் பில்கேட்ஸ் விவகாரத்துக்கு காரணமா…!

sathya suganthi

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

இந்த சிறிய கார் மேட்-க்கு 25 ஆயிரம் ரூபாயா? – ஆன்லைன் ஆர்டரால் அதிர்ச்சி

Shanmugapriya

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

‘கோல்டன் கேர்ல்ஸ்’ – 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

Lekha Shree

தடுப்பூசி எடுத்துக் கொண்ட 94 வயதாகும் இங்கிலாந்து ராணி! உடல்நலம் குறித்து வெளியான தகவல்!

Tamil Mint

பெய்ஜிங்: 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree

ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடிய கிரிக்கெட் வர்னனையாளர்!

Jaya Thilagan