a

93 ஆண்டுகள் பழமையான விளக்கை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பெண்!


இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் 93 ஆண்டுகள் பழமையான சரவிளக்கு ஒன்றை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள சம்பவம் மக்களிடையே பேசுபொருள் ஆகியுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அமர்ந்தாள் லிபர்டி. அவருக்கு ஆப்ஜெக்டோபிலியா என்ற அரிய வகை நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த நோய் காரணமாக அவருக்கு உயிரற்ற பொருட்கள் மீது அதிக அன்பும் பாசமும் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அது குறித்து தனக்கு சரியாக எதுவும் தெரியாத நிலையில் பின்னர் மருத்துவர்களை அணுகியபோது இதுபோன்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி - ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

முதலில் தன்னுடைய இந்த போக்கை விசித்திரமாக பார்த்தவர் பின்னர் நாளடைவில் அதனை பழகிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும் தான் 93 ஆண்டுகள் பழமைமிக்க ஒரு சர விளக்கை காதலித்து வருவதாகவும் அதனையே திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் பலரால் பேசப்பட்டது. பின்னர் தன் நிலை குறித்து தெரிவித்த அவர், ” முதலில் எனக்கே என்னை பார்க்க சற்று விசித்திரமாக இருந்தது. நாளடைவில் என்னுடைய நிலை குறித்து புரிந்து கொண்டேன். தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அந்த சர விளக்கை வெறும் விளக்காக மட்டும் பார்க்கவில்லை என்னுடைய வாழ்க்கையாக பார்க்கிறேன். என்னை நானே ஏற்றுக்கொண்ட தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் படி அனைவரும் உங்களை நீங்களே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்! – அமெரிக்காவில் வினோதம்

Shanmugapriya

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

Tamil Mint

70 ஆயிரம் அமெரிக்கர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்! ட்ரம்ப்புக்கே செக் வைத்த இந்தியப் பெண்!

Tamil Mint

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

கேட்வாக் செய்த வெள்ளாடுகள்…! துருக்கியில் நடந்த கண்கவர் அழகுப்போட்டி…!

Devaraj

கேன்சரால் பாதிப்படைந்த மூதாட்டியின் விருப்ப உணவை சமைத்துக் கொடுக்க 850 கி.மீ பயணம் செய்த குழு!

Shanmugapriya

ஊசி இருந்தா தான போடுவீங்க… கொரோனா தடுப்பூசியை திருடிய நபர்கள்…! எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

Tamil Mint

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj

சிவப்பு பட்டியலில் இந்தியா….!

Devaraj