a

“நானும் ரெளடி தான்” போலீசை மிரட்டிய பெண்! வைரஸ் வீடியோ!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ள அரசு, மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இரு சக்கர வாகனங்களில் செல்லும் மாஸ்க் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலித்து வந்தனர்.

Also Read  ஏன் தாமதமாகிவிட்டது என்று கேட்டதற்காக பெண்ணை மூக்கில் குத்திவிட்டு தப்பிச் சென்ற டெலிவரி பாய்!

அப்போது அப்பகுதியில் மாஸ்க் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் அபராத தொகையை காட்டும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் “இத்துணுண்டு மாஸ்க்குக்கு ரூ.200 அபாரதமா?” என கேட்டுள்ளார்.

அதற்கு காவல்துறை அதிகாரி, “போய் கலெக்டரிடம் கேளுங்க” என கூறியுள்ளார். அதற்கு அப்பெண், “யோவ் கலெக்டரை கூப்பிடு நானே கேட்கிறேன். எவனாயிருந்தாலும் மானத்தை வாங்கிடுவேன்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

Also Read  யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்!

அப்போது அங்கே இருந்த சக காவலர் வீடியோ எடுக்க, “என்ன பேஸ்புக்குல போடப்போறியா போடு, ஜெயில்ல போடப்போறியா போடு. நானும் ரவுடி தான் பாத்துக்க” என தகாத வார்த்தைகளை கூறியுள்ளார்.

இவ்வாறு வீதியை மீறி அபராதம் கேட்ட போலீசையே அவமரியாதையாக பேசிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த பலர் தெரிவித்தனர்.

Also Read  7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், மனோஜபேட்டையை சேர்ந்த நந்தினி என்ற அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண் அந்த வீடியோவில் மாஸ்க்கை தனது ஸ்கூட்டரில் வைத்துள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

எடப்பாடி, ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்?

Tamil Mint

எதிர்கட்சியினர் பேசத் தயங்கும் வார்த்தைகளை பேசி தவறு செய்பவர்கள் வருந்துவார்கள் – டிடிவி.தினகரன்

Tamil Mint

தரமணி பகுதியில் வழிப்பறி: 8 நபர்கள் கைது!!

Tamil Mint

மதுரையில் எய்ம்ஸ் எப்போது? மத்திய அரசை கண்டித்த எம்.பி., சு.வெங்கடேசன்!

Tamil Mint

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

Tamil Mint

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

அனுமதித்தால் யாத்திரை, இல்லையென்றால் போராட்டம்: எச் ராஜா ஆவேசம்

Tamil Mint

கிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை

Tamil Mint

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Tamil Mint