உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை..!


உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தும் பிரான்ஸ், இத்தாலியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியும், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும் பதிவாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளை விட மிக அதிகமாக உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல நாடுகளிலும் கொரோனா 4-வது அலையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது அலையும் தாக்கி உள்ளது.

Also Read  மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உலக நாடுகளில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,82,116 ஆகவும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,284 ஆகவும் உலகம் முழுவதும் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,60,278 ஆகவும் உள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 6,63,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1642 பேர் உயிரிழந்தனர்.

Also Read  சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

பிரான்ஸ் நாட்டில் 2,61,481 பேருக்கும் இத்தாலியில் 2,19,441 பேருக்கும் இங்கிலாந்தில் 1,79,756 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதேபோல் இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,4841 ஆக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  'தலைதூக்கும் தீண்டாமை..!' - பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் பெற்றோருக்கு அபராதம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை

Tamil Mint

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தண்டனை இது தான்

Tamil Mint

சிலைக்கு மாஸ்க் அணிவித்த ஜப்பானியர்கள்…!

Lekha Shree

யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!

Lekha Shree

இந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட Zomato..!

Lekha Shree

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

Tamil Mint

கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல் பதிவு

sathya suganthi

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்..!

Lekha Shree

மருத்துவருக்கு செவிலியர் தந்த பளார்…! கொரோனா பணிச்சுமையால் மோதல்…!

Devaraj