a

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!


இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்த தொற்றுக்கு எதிரான மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என சிகிச்சைக்கான உபகரணங்களில் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக நாடுகள் பல இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. மருந்து பொருட்கள், சிகிச்சைக்கான தளவாடங்களை அனுப்பி வைக்க அமெரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனாவின் தொடக்க காலத்தில் அமெரிக்கா தவித்து வந்த போது இந்தியா உதவியது போல தற்போது அவர்களுக்கு தேவை இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என கூறியிருந்தார்.

மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ரூபாய் 135 கோடி நிதிஉதவி அறிவித்து உள்ளார். அது தொடர்பான முக்கிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Also Read  கொரோனா வைரசுக்கு எமனாக வரும் "நானோ முகக்கவசம்" - வியக்கவைக்கும் தகவல்கள்…!

அதேபோல், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி நாதெல்லாவும் தங்கள் வளங்கள் தொழில்நுட்பங்களை இந்தியாவில் சிகிச்சை சாதனங்கள் வாங்குவதற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் வினோத் என்பவரும் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.

Also Read  இந்தியா: 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமீரகமும் தனது ஆதரவை அளித்து இருக்கிறது. இதை வெளிப்படுத்தும் வகையில் புர்ஜ் கலீபா உள்ளிட்ட முக்கியமான கட்டடங்களில் இந்திய தேசிய கொடி வண்ணத்தில் விளக்குகளை ஒளிர விட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு உதவிகளை வழங்க அறிவித்து வருகின்றன.

Also Read  "ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்" - சீமான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உபியில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு

Tamil Mint

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.!

Tamil Mint

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

தூக்கத்தில் சுவாசப் பிரச்சனையா…? கொரோனாவால் ஆபத்து…! மருத்துவ ஆய்வில் தகவல்…!

Devaraj

கொரோனாவுக்கு ராஜஸ்தான் பெண் எம்.எல்.ஏ பலி

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை குறைவது எப்போது? – மத்திய அமைச்சர் கூறிய தகவல்!

Shanmugapriya

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint

பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

Tamil Mint

இத்தனை வகை வண்ணத்துப்பூச்சிகளா…! – சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் நியூஸ்…!

Devaraj

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree