a

இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!


இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிமடைந்து வருகிறது. மேலும் 2 முறை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரசும் கண்டறியப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2வது அலை தீவிரமடைய தொடங்கிய உடனே நியூசிலாந்து அரசு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்தது.

Also Read  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். மேலும், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிவப்பு பட்டியலில் இந்தியாவை இங்கிலாந்து சேர்த்தது. மேலும் குடிமக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் இருந்து வர தடை விதித்துள்ளது. இந்தியாவுடனான விமான போக்குவரத்தையும் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசும் தனது குடிமக்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இந்தியாவுக்கான 4ம் நிலை பயண சுகாதார அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய அமெரிக்க குடிமக்கள், பயணத்திற்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சமூக இடைவெளி, சோப்பு அல்லது சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசங்கள் அணிவது மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்ப்பது என தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Also Read  வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

காற்றோட்ட வசதி இல்லாத மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Tamil Mint

15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு! – வீடியோ

Shanmugapriya

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj