இன்றளவும் பிரமிக்க வைக்கும் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் – 37 ஆண்டுகால நினைவை கொண்டாடும் ரசிகர்கள்


ஜூன் 25, 1983. இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாக அது மாறும் என்று யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளை எவ்வளவு அலட்சயத்துடன் பார்ப்பார்களே அதே அளவு அசுவராசியத்துடன்தான் அன்று இந்தியா இந்த மேட்ச்களை கவனித்துக்கொண்டிருந்தது.

இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. அப்போது பொதுவாக கிரிக்கெட் என்பதே ஒரு மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினரின் ஆட்டமாகத்தான் கருதப்பட்டு வந்தது.

இப்போது போல மேட்சுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு கூட அப்போது வாய்ப்பேயில்லை.

ஊரில் நான்கைந்து வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்தன. மற்றபடி ரேடியோவில் கேட்கும் கமென்ட்ரி மட்டும்தான்.

அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளின் வர்ணனை கேட்க வேண்டுமெனில் நான்கு பேண்ட் ரேடியோ வேண்டும்.

Also Read  2021 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு… களத்தில் இறங்கும் சிஎஸ்கே… உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஊரில் பெரும்பாலும் இரண்டு பேண்ட் ரேடியோக்கள்தான் இருக்கும். சில தெருக்களில் மட்டுமே பிபிசி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி ஒலிபரப்பை கேட்கும்படி நான்கு பேண்ட் ரேடியோக்கள் இருக்கும்.

இந்தியா இடம்பெற்றிருந்த குழுவில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன.

இங்கிலாந்து ஆட்டக்களங்கள் சீம், ஸ்விங் பந்து வீச்சுக்கு உகந்ததாய் இருந்தது இந்திய அணிக்கு சாதகமாகப் போனது.

கபில்தேவ், பின்னி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் அனைவருமே இந்த முறையில் பந்து வீசக்கூடியவர்கள்.

Also Read  எல்லாம் சரிதான் ஆனால் நாட்டுக்காக விளையாடுறது ரொம்ப முக்கியம் பாஸ் - இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட்!

யஷ்பால் ஷர்மா, சந்தீப் பாட்டில் இருவரும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் துடிப்பாக ஆடக்கூடியவர்கள்.

கவாஸ்கர், அமர்நாத் குவாலிட்டி பேட்ஸ்மென்கள், ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடக்கூடியவர். கபில்தேவ், இன்று வரை இந்தியாவில் உருவான ஒரே உலகத்தரமான ஆல் ரவுண்டர். பின்னி, மதன்லால் போன்றோர் பேட்டிங்கிலும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள். கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் களத்தில் நீண்டநேரம் நின்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்.

எனவே, எச்சூழலையும் சமாளிக்கும் சரிநிகர் சமானமான அணியாக இந்திய அணி இருந்தது.

ஸ்ரீகாந்த், கபில்தேவ் உள்ளிட்டோரின் சிறந்த ஆட்டத்தால் இந்தியா முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீசை 43 ரன்னில் வீழ்த்தி முதல் உலக கோப்பையை இந்தியா வென்றது. 184 ரன் இலக்கை எடுக்க முடியாமல் அந்த அணியை 140 ரணில் இந்திய வீரர்கள் சுருட்டினர்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ…!

இந்த ஜூன் 25-க்குப் பின் இந்தியாவே ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை ஹாக்கி, ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்த இந்திய சிறுவர்கள் கிரிக்கெட்டின் பால் ஈர்க்கப்பட்டனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் மேற்கு வங்கம் வரை இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பரவியிருப்பது கிரிக்கெட்தான். அப்படி கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க காரணமான நாள் ஜூன் 25, 1983 என்றால் அது மிகையாகாது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

முதல் ஒருநாள் – இந்தியா அசத்தல் வெற்றி!

Devaraj

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

sathya suganthi

கொரோனா தளர்வுகளால் களைகட்டும் மணாலி… சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் வீதிகள்..!

Lekha Shree

கொரோனா ஊரடங்கு : ஓட்டுநர் உரிமம் ரினிவல்…! அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!

Devaraj

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு ஒரு நல்ல செய்தி!

Devaraj