உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு… வைரல் வீடியோ இதோ..!


புட்டி அல்லது பூடான் பசு வகையை சேர்ந்த 23 வயதான ராணியின் (பசுவின் பெயர்) உயரம் 50 சென்டிமீட்டர் மற்றும் எடை 28 கிலோ.

உலகத்தின் மிக சிறிய பசுவாக ராணி உள்ளதால் பசுவின் உரிமையாளர் ஹசன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்து ராணியின் உரிமையாளர் ஹசன் கூறுகையில், “பசுவை காண பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்படி ஒரு பசுவை வாழ்நாளில் கண்டதில்லை எனக் கூறி விட்டு செல்கின்றனர் பார்வையாளர்கள்.

வங்கதேசத்தின் தென் மேற்கில் இருக்கும் நாகான் மாவட்டத்தில் உள்ள பண்ணையில் இருந்து ராணியை கடந்த ஆண்டு வாங்கினேன்.

Also Read  வடகொரியாவின் கடலுக்கடியில் பாயும் ரகசிய ஏவுகணை...

ராணிக்கு நடப்பதில் பிரச்சனை இருப்பதாலும் மற்ற பசுக்களை கண்டு அச்சம் ஏற்பட்டதாலும் அதனை தனியாக வைத்து நாங்கள் வளர்க்கிறோம்.

ராணிக்கு வெளியில் சுற்றித் திரிவது பிடிக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சிறிய அளவில் தவிடு மற்றும் வைக்கோல் தான் ராணியின் உணவு. ராணியை விற்பதற்கான எண்ணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Also Read  வைரலான அஸ்வின்-சிவாங்கி திருமண வீடியோ - பதறியடித்து விளக்கம் அளித்த இளசுகள்…!

இப்போது 61.1 சென்டி மீட்டர் கொண்ட இந்தியாவில் உள்ள மணிக்யா என்ற பசு தான் உலகின் மிகச்சிறிய பசுவாக உள்ளது.

இதனை முறியடித்து ராணிக்கு அந்த பட்டம் சூட்ட வேண்டும் என்பதே ஹசனின் (பசுவின் உரிமையாளர்) எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read  "அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை" - டிரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

Devaraj

மாற்றம் ஒன்றே மாறாதது : மெக்காவில் பாதுக்காப்பு பணியில் முதல் பெண் பாதுகாவலர்

suma lekha

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

சுட்டெரிக்கும் வெப்பம் – வீதிகளில் போராடும் மக்கள்!

Lekha Shree

இங்கிலாந்து: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இருவருக்கு ஒவ்வாமை

Tamil Mint

தென் ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா; மக்கள் கடும் பீதி!

Tamil Mint

மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

Shanmugapriya

“பெற்றோர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்” – 41 வயது வேலையில்லா பட்டதாரி வழக்கு!

Shanmugapriya

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

புளூ மூனை பார்க்கத் தயாரா?

Tamil Mint

களத்தில் கலக்கும் சஹல் – நடனத்தில் அசத்தும் தனஸ்ரீ !

Devaraj

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint