இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!


ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை தனித்தனி நாடுகளாக காட்டியது தொடர்பான விவகாரத்தில் இந்திய ட்விட்டர் நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலண்ட்ஷஹ்ர் பகுதியை சேர்ந்த பஜ்ரங் தளம் கட்சி உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 (2) மற்றும் 2008ம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம் பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி..!

இந்திய அரசு மற்றும் டுவிட்டர் நிறுவனத்துக்கு இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டர் பக்கம் தற்காலிக முடக்கம் போன்றவற்றால் ட்விட்டர் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் வரைபடத்தை தவறாக வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியது ட்விட்டர் நிறுவனம்.

Also Read  அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

ஜம்மு காஷ்மீரை தனி நாடாகவும் லடாக்கை தனி நாடாகவும் ட்விட்டரில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே காஷ்மீர் லடாக் பகுதிகளால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு தகராறு இருந்து வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த செயல்பாடு மத்திய அரசு வட்டாரத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

இந்த நிலையில் இந்தியாவின் வரைபடத்தை தவறாக காட்டியதாக ட்விட்டரின் இந்திய நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! – இது ஒரு நிகழ்ச்சி கதை!

Shanmugapriya

கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளம்!

sathya suganthi

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

இந்தியா – வங்காளதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

Lekha Shree

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் பங்கெடுப்பு: நடிகை கங்கனா ரணாவத்

Tamil Mint

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint