“தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது” – யாஷிகா தாயார் உருக்கம்..!


யாஷிகாவின் உடல்நிலை குறித்து தெரிவித்த அவரது தாயார் தனது தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் மாமல்லபுரம் அருகே வேகமாக காரில் சென்றபோது அந்த கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி உயிரிழந்தார்.

Also Read  குறும்படம் இயக்கும் "பாகுபலி" ராஜமௌலி…!

படுகாயமடைந்த யாஷிகாவும் அவரது 2 ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

யாஷிகாவின் உடல்நிலை குறித்து தெரிவித்த யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த், “யாஷிகா தற்போது நலமுடன் இருக்கிறார். கால், இடுப்பு, வயிற்று பகுதிகளில் ஏற்பட்டுள்ள பலத்த காயத்தினால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read  தொடங்கிய படப்பிடிப்பு... விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்: அப்டேட் கூட இல்லாமல் சைலன்ட்டான அஜீத் ரசிகர்கள்!

விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி அவருக்கு தெரியாது. பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது வெண்டிலேட்டர்-ல் வைத்திருப்பதாக கூறியுள்ளோம்.

மருத்துவர்களும் இதுகுறித்து யாஷிகாவிடம் பேச வேண்டாம் என அறிவுறுத்தினர். சிகிச்சைக்கு பின் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 2 மாதம் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என உருக்கமாக கூறினார்.

Also Read  ரிலீஸுக்கு தயாராகும் 'குக் வித் கோமாளி' பிரபலத்தின் திரைப்படம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

யூடியூபை அசத்திய சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்.!

suma lekha

வெள்ளை உடையில் மின்னும் பிரியா பவானிசங்கர்… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

Lekha Shree

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

“5 மாதங்களுக்கு எழுந்து நிற்க முடியாது” – தனது உடல்நலம் குறித்து யாஷிகா கொடுத்த அப்டேட்..!

Lekha Shree

இசையை மையப்படுத்தும் இசைப்புயலின் புதிய அவதாரம்…

VIGNESH PERUMAL

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் சன்னி லியோன்!

Shanmugapriya

ராம்சரணுக்காக 231 கிலோ மீட்டர் நடந்த ரசிகர்!

Shanmugapriya

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

“பண்டாரத்தி-மஞ்சனத்தி” தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? – மாரிசெல்வராஜ்

Devaraj