a

PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!


பத்ம சேஷத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த பிரச்சனைக்கு நடுவே பள்ளியின் டிரஸ்டி ஒய் ஜி மகேந்திரா அவரது குடும்பத்தினர் யார் என்பதையும், அவர்கள் உறவினர்கள் குறித்த செயின் தான் தற்போது பேசுப் பொருளாகி உள்ளது.


பத்ம சேஷாத்ரி பள்ளியுடைய டிரஸ்டி நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர்.

பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை. வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான்.

Also Read  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த பத்திரிகையாளர் இவர்.

ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரி அவர்கள்தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டுவந்தவர். ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர். கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர். மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா. இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டார்.

Also Read  வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரானாவால் உயிரிழப்பு...!

சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர். லதாவின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை மணந்தார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார். லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம் என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்திருக்கிறார். லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர். ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்.

அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர்.

எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர். கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம்.

Also Read  கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி. கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர். ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குநர்தான்.

கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே. ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இப்போது பாஜகவில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி – சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார். இந்த குடும்ப செயின் சற்றே தலைசுற்றுகிறது தான்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

Lekha Shree

தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்: பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி

Tamil Mint

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree

மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப்பொருள்…! விசாரணையில் தெரியவந்த உண்மை…!

sathya suganthi

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

Tamil Mint

21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

sathya suganthi

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!

Lekha Shree