ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்…! என்ன காரணம்?


பாஜகவின் செயற்குழு உறுப்பினரும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி, 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இவர் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் சில மாதங்கள் தவணையை முறையாக காட்டியுள்ளார். ஆனால், அதன்பிறகு தொடர்ந்து பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Also Read  தமிழகத்தின் 25வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்கிறார்.!

பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலை சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Also Read  "பெண்களுக்கு அரசியலில் சவால்கள் அதிகம்!" - கனிமொழி எம்.பி. அதிரடி பதில்..!

ஆனால், அதற்கு உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்ததால், இந்துஜா பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோபாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

Also Read  இனி ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்.!

இதனை தொடர்ந்து வழக்கறிஞர், கமிஷன் வினோத்குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டு சாவி பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக தனியார் பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் மதுவந்தி மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை முதல் ரேசனில் மளிகை தொகுப்பு வினியோகம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

sathya suganthi

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் – பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை!

Tamil Mint

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுகிறதா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Tamil Mint

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்

Tamil Mint

“வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தால் 16% தள்ளுபடி!” – கார் சர்வீஸ் சென்டர் நூதன விழிப்புணர்வு!

Shanmugapriya

சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய தாய்-மகள் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்..!

Lekha Shree

தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறிய ‘பப்ஜி’ மதன்…!

Lekha Shree

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran