a

பறந்து பறந்து தாலிக்கட்டிய “90’s Kid” – விமானத்தையே வாடகைக்கு எடுத்த கல்யாண கோஷ்டி…!


“சும்மா வானத்துல பறந்து பறந்து தாலிக்கட்டணும்” என்பது இளசுகளாக இருக்கும் போது பலரின் மனதில் பறக்கும் கற்பனைகளில் ஒன்று.

ஆனால் திருமணம் என்ற ஒரு சூழல் வரும் போது, பொண்ணு கழுத்துல தாலி மட்டும் கட்டிட போதுங்குற நிலைக்கு உறவினர்களின் வம்படிகளும், பண திண்டாட்டமும் கொண்டு சேர்ந்து நிறுத்தி விடும்.

ஆனால், மதுரையில் ஒரு “90’s Kid” எல்லாரையும் அண்ணாந்து பார்க்கும் வகையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பிரச்சனை வராத வகையிலும் தனது திருமணத்தை முடித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ் மற்றும் மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா, இவர்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

Also Read  ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

திருமணத்தை வித்தியாசமான முறையில் பறக்கும் விமானத்தில் நடுவானில் நடத்த திட்டமிட்ட திருமண வீட்டார், தனியார் விமானத்தை 2 மணி நேரம் வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.

நேற்று காலை 7.30 மணியளவில் திருமண ஜோடி உள்பட உற்றார், உறவினர்கள் 161 பேருடன் விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை சென்று திரும்பியது.

Also Read  ஸ்டெர்லைட் ஆலையால் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க முடியாது - தமிழக அரசு!

விமானம் காலை 7.30 மணிக்கு புறப்பட்ட நிலையில், நடுவானில் உறவினர்களின் வாழ்த்து கோஷத்திற்கு மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார்.

மதுரையில் புறப்பட்ட விமானம் தூத்துக்குடி வரை சென்று விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

Also Read  தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி இல்லாமல், முகக்கவசம் அணியாமலும் திருமணத்தில் பங்கேற்றதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த திருமணத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 7 லட்சம் வீதம் 2 மணி நேரத்திற்கு 14 லட்சம் தனியார் விமானத்திற்கு வாடகை கொடுக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடும் சென்னை மக்கள்: அதிகரிக்க போகிறதா கொரோனா பாதிப்பு?

Tamil Mint

மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

Tamil Mint

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

நீட் தற்கொலை: மாணவியின் உருக்கமான ஆடியோ

Tamil Mint

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்

Tamil Mint

“சசிகலாவின் உயிருக்கு ஆபத்து” – சசிகலாவின் தம்பி திவாகரன் அச்சம்!

Tamil Mint

பதவியேற்பில் ஓரம்கட்டப்பட்டாரா கனிமொழி? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

sathya suganthi